பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 135

மேலே கூறிய குறியீடுகளைத் தவிர, ஆடுகளத்தில் வேறெந்தக் குறியீடும் இருக்கக்கூடாது. இலக்குக் காவலர்கள், தங்கள் இலக்கிற்கு முன்னதாக, எந்தவித அடையாளமும் செய்து கொள்ளக் கூடாது.

(எ) 4 அடிக்குக் குறையாத5 அடிக்கு மிகாத முனை மழுங்கிய உயரமுள்ள கொடிக்குச்சிகள், ஆடுகளத்தின் ஒவ்வொரு மூலை யிலும் ஊன்றி வைக்கப்பட்டிருக்க வேண்டும். நடுக்கோட்டிலும் 25 கெசக் கோடுகளிலும் உள்ள கொடிக்குச்சிகள் (நீள அகலத்தில் 12 அங்குலத்திற்கு மிகாத கொடிகள் பக்கக் கோடுகளுக்கு வெளியே ஒரு கெசத்திற்கு அப்பால் ஊன்றி வைக்கப்பட்டிருக்க வேண்டும். (படம் காண்க)

2. இலக்கு, இலக்குக் கம்பங்கள் முதலியன

ஒவ்வொரு கடைக்கோட்டின் மத்தியிலும் ஒரு இலக்கு உண்டு. இலக்கின் அகலம் 4 கெசம் இருக்குமாறு காட்டும் இரு கம்பங்களின் மேல் உயரம், தரையில் இருந்து 7 அடி இருக்குமாறு ஒரு குறுக்குக் கம்பத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

நடப்பட்டிருக்கும் இலக்குக் கம்பங்களின் முன்பாகம் கடைக்கோட்டின் வெளிப்புறத்தைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். குறுக்குக் கம்பத்துக்கு வெளியே இலக்குக் கம்பங்கள் நீண்டிருப்பதோ அல்லது இலக்குக்கம்பங்களைவிடகுறுக்குக் கம்பம் நீண்டிருப்பதோ கூடாது.

இலக்குக் கம்பங்கள், குறுக்குக் கம்பம் இவைகளின் அகலம் 2 அங்குலமாகவும், கனம் 3 அங்குலத்திற்கு மிகாமலும் நீண்ட சதுரம் பெற்ற கம்பங்களின் ஓரங்கள் (Edges) ஆடுகளத்தை நோக்கியபடி பதிக்கப்பட்டிருக்க வேண்டும். இலக்குக் கம்பங்களிலும், குறுக்குக் கம்பத்திலும், இலக்குவின் பின்புறத்தில் உள்ள தரையிலும் 6 அங்குலத்திற்கு மிகாத இடைவெளியில் வலை இறுகக் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

18 அங்குலத்திற்கு மேற்படாத அளவு கொண்ட இலக்குப் பலகைகள் (Goal Board) இலக்கின் வலைக்கு ஓரடி உட்புறமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். கடைக் கோடுகளுக்கு செங்கோண மாக இருக்குமாறு பக்கப் பலகைகள் பொருத்தப்படல் வேண்டும். பக்கப் பலகைகள் இலக்குக் கம்பங்களின் பின்பகுதியில் பொருத்தப்படும்பொழுது, கம்பத்தின் அகலத்திற்கு மேலே போகாமலும், இலக்கிற்கு உட்புறமோ அல்லது வெளிப்புறமோ செல்லாமலும் இருக்குமாறு வைக்க வேண்டும்.