பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 137

ஒப்புதலின் பேரில் வைத்துக் கொள்ளலாம். இந்த விதிகளுக்குட் பட்டு அமைந்திருக்கும் பந்தையே நடுவர்களும் அனுமதிக்க வேண்டும்.

2. கோல்களும், காலணிகளும்

(அ) கோலின் (Stick) இடது கைப்பக்கத்தில் மட்டுமே தட்டையான பாகம் இருக்க வேண்டும். --

(ஆ) கோலின் தலைப்பாகம் (அதாவது மேலே உள்ள இணைப்பிற்கு அடிப்பாகத்தில்) உலோகத்தால் வரம்பு கட்டியதாகவோ அல்லது உலோகம் ஏதாவது உட்செலுத்தப் பட்டதாகவோ அல்லது பொருத்தப்பட்டதாகவோ இருக்கக் கூடாது. கூர்மையான நுனி அமைந்ததாகவோ அல்லது அபாயம் விளைவிக்கக் கூடிய சிம்புகளோ (Splinters) அதில் இருக்கக் கூடாது. கோலின் முடிவிடம் (Extermity) சதுரமாகவோ அல்லது கூர்மையாகவோ அமையாமல், வளைவுள்ளதாக அமைய வேண்டும்.

(இ) கோலின் மொத்த எடை 28 அவுன்சுக்கு மிகாமலும், 12 அவுன்சுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். பெண்களின் ஆட்டத்திற்குரிய கோலின் எடை 23 அவுன்சுக்கு மிகாமலும், 12 அவுன்சுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். அந்தக் கோலின் மொத்த உருவ அமைப்பு (மேல் சுற்றப்பட்டக்கட்டுடன்) உட்புறத்தில் 2 அங்குலம் விட்டம் உள்ள ஒரு வளையத்திற்குள் தடையில்லாமல் நுழையுமாறு அமைந்திருக்க வேண்டும்.

தண்டனை: இவ்விதிகளுக்கு இணக்கம் இல்லாது இருக்கின்ற கோலை ஆட்டத்தில் பயன்படுத்த முடியாதபடி, நடுவர் தடுத்து விடுவார்.

(ஈ) மற்ற ஆட்டக்காரர்களுக்கு அபாயம் விளைவிக்கக்கூடும் என்று நடுவர் கருதுகின்ற காலணியையோ அல்லது மற்ற பொருட்களையோ ஒரு ஆட்டக்காரர் அணிந்து கொள்ளக்கூடாது. இந்த விதிக்கு அடங்காது அணிந்திருக்கும் அணிகலனை (Wearing) அணிய விடாது நடுவர் தடுத்து விடுவார்.

ஒவ்வொரு குழுவும், அதனதன் சங்கம் அனுமதித்திருக்கும் சீருடையையே (Uniform) அணிய வேண்டும். எதிர்க்குழுவின் சீருடைக்கு ஏற்ப இருந்து குழப்பி விடுவதைத் தவிர்க்க வேண்டும். இலக்குக் காவலன் மார்பு காக்கும் மேலுறைகள், காலுறைகள், கையுறைகள், தலைக்கவசம் முதலியவற்றை கட்டாயம்

அணிந்திருக்க வேண்டும்.