பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 விளையாட்டுக்களின் விதிகள் >

5. விளையாட்டுக்குரிய விளக்கங்கள் 1. ஆட்டத்தில் தொடக்கம் (Start)

(அ) முதலில் விளையாட்டைத் தொடங்கி வைக்கவும், வெற்றி எண் பெற்ற பிறகு, மீண்டும் விளையாட்டைத் தொடங்கி வைக்கவும், இடைவேளை முடிந்த பிறகு ஆட்டத்தைத் தொடங்கவும், ஆடுகளத்தின் மையப் புள்ளியில் இருந்து எடுக்கப்படும் இந்தப் பந்தைப் பின்தள்ளும் முறை பயன்படுகிறது.

(ஆ) ஆட்டத்தில் பந்து பின்புறம் தள்ளி விளையாடப்படும் முன், மற்ற எல்லா ஆட்டக்காரர்களும், பந்து இருக்கும் இடத்தை விட்டு, அவரது சொந்தக் கடைக்கோட்டின் அருகிலேயே நின்று கொண்டிருக்க வேண்டும். ஒருவரும் பந்துக்கு 5 கெச தூரத்திற்கு உள்ளாக நிற்கக்கூடாது.

பந்தை புல்லி (Bully)

(அ) பந்தைப் புல்லி (Bully) எடுப்பதில், ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஒருவர் வந்து பங்கு பெறுவர். வலப்புறத்தில் அவரது கடைக்கோடு இருக்க, பக்கக் கோடுகளின் பக்கமாக முகந்திருப்பி அவர்கள் நின்று கொண்டிருக்க வேண்டும். அந்த இரண்டு ஆட்டக்காரர்களுக்கும் இடையில், பந்து தரையில் வைக்கப் பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆட்டக்காரரும் பந்துக்கும், தன்னுடைய சொந்தக் கடைக்கோட்டிற்கும் இடையில் தட்டி, பின்னர் பந்துக்கு மேலே எதிராளியில் கோல் முகத்தில் தட்டி (தட்டையான பகுதியில்) இதேபோல் மாறி மாறி ஒருமுறை தட்டவேண்டும். பிறகு, அந்த இருவரில் ஒருவர் அவருடைய கோலால் பந்தை விளையாடியவுடன், பொதுவான ஆட்டம் தொடங்கும்.

(ஆ) ஒறுநிலை அடி எடுக்கும் நிலையைத் தவிர அடிக்கும் வட்டத்திற்குள்ளே கடைக்கோட்டில் இருந்து 5 கெசத்திற்கு உள்ளாக எந்தப் புல்லியும் எடுக்கப்படக் கூடாது.

தண்டனை: இந்த விதியை மீறினால், புல்லியை மறுபடியும் எடுக்க வேண்டும். பிடிவாதமாகத் தொடர்ந்து இந்த விதியை மீறினால், எதிர்க் குழுவினருக்குத் தனி அடி வாய்ப்பை நடுவர் வழங்குவார். தடுக்கும் குழுவினர் அடிக்கும் வட்டத்திற்குள் இதுபோன்றத் தவறுகளைச் செய்தால், ஒறுநிலை முனை அடியைத்

தண்டனையாகப் பெறுவர்.