பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 143

2. தனி அடி

(அ) (விதி 5-ல் அ; விதி 6-ல் அ; விதி7) தவிர, எந்த இடத்தில் தவறு நிகழ்ந்ததோ, அதே இடத்தில் தனி அடி (Free Hit) எடுக்கப்பட வேண்டும். தடுக்கும் குழுவிற்குத் தனி அடி எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தால், கடைக்கோட்டில் இருந்து 16 கெச தூரம் (உட்புற அளவில்) தவறு நடந்த இடத்தில் இருந்து பக்கக் கோட்டிற்கு நேரிணையாக உள்ள எந்த இடத்திலும் வைத்துப் பந்தை அடிக்கலாம்.

(ஆ) பந்தை அடிக்கலாம் அல்லது தரைவழியாகத் தள்ளலாம் (Push), ஆனால் பந்தைக் குடைந்தாடும் முறை (Scoop stroke) இந்த நிலையில் அனுமதிக்கப்படுவதில்லை. அபாயகரமான முறையில், ஆடுவதற்கு அனுமதி இல்லை. தனி அடி அடிக்கும் முறை

அடிக்கும் வட்டத்திற்குள் தாக்கும் குழு தவறு இழைத்தால், தடுக்கும் குழு தனி அடி அடித்துத் தொடங்க வேண்டும். அப்பொழுது, அந்த வட்டத்திற்குள் எந்த இடத்தில் வேண்டு மானாலும் வைத்து தனி அடி எடுக்கலாம்.

தனி அடிக்கு முன், பந்து நிலைப்பந்தாக இருக்க வேண்டும்.

அடிக்கப்படும் பந்தானது, வட்டத்திற்குள்ளே முழங்கால் உயரத்திலே மேலே உயர்ந்து செல்லுமாறு அடித்தாடக் கூடாது.

தனி அடிஅடிக்கும்பொழுது, தரையில் பந்து அசைவற்று இருக்க வேண்டும். ஆட்டக்காரர் எந்தக் குழுவைச் சேர்ந்தவராயினும், பந்துக்கு 5 கெசத் தூரத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்தாலும், தனி அடியை மீண்டும் எடுக்க வேண்டும். பந்துக்கு 5 கெசத் தூரத்திற்குள்ளாக ஒரு ஆட்டக்காரர் நின்று கொண்டு நேரத்தைக் கடத்தி, அதனால் பயன் அடைகிறார் என நடுவர்கருதினால், அந்தக் காரணத்திற்காக நடுவர் தனி அடி எடுப்பதற்குரிய காலத்தைத் தாமதப்படுத்தக் கூடாது.

தனி அடி அடித்ததும், மற்ற ஆட்டக்காரர் (யாராயினும்) அந்தப் பந்தை விளையாடுவதற்கு முன், தனி அடியை எடுத்தவரே, பந்தை மீண்டும் விளையாடவோ, பந்து விளையாடப்படும் தூரத்திற்கு நெருங்கிச் செல்லவோ கூடாது.

தண்டனை: இந்த விதியை மீறினால்...

1. வட்டத்திற்கு வெளியே நடந்தால்: எதிர்க் குழுவினருக்குத் தனி அடிவாய்ப்புத் தரப்படும்.