பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 விளையாட்டுக்களின் விதிகள் *E,

2. வட்டத்திற்கு உள்ளே தாக்குவோர் நடந்தால்: எதிர்க் குழுவினருக்குத் தனி அடி வாய்ப்புத் தரப்படும்.

3. தடுப்போர் நடந்தால்: எதிர்க் குழுவினருக்கு ஒறுநிலை முனை அடி அல்லது ஒறுநிலை அடிவாய்ப்பு வழங்கப்படும்.

கோல் விதியை மீறி நடந்தால்:

(அ) வட்டத்திற்கு வெளியே எதிர்க்குழுவினருக்குத் தனி அடி (Free Hit) வாய்ப்பு வழங்கப்படும்.தடுக்கும் குழுவைச் சேர்ந்தவர் தன் சொந்த 25 கெசப் பரப்பில், வேண்டுமென்றே செய்த தவறென்று நடுவர் கருதினால், இதற்குத் தண்டனையாக ஒறுநிலை முனை அடியைத் (Penalty-corner) தருவார்.

(ஆ) வட்டத்திற்குள்ளே: தாக்குவோர் தவறு இழைத்தால் எதிர்க்குழுவினருக்குத் தனி அடி வாய்ப்பு வழங்கப்படும்.

இரண்டு எதிராளிகள் சேர்ந்தாற்போல் ஒரே சமயத்தில், வட்டத்திற்கு உள்ளே அல்லது வெளியே விதியை மீறி நடந்தால்.

எந்த இடத்தில் இந்தத் தவறு நடந்ததோ, அந்த இடத்தில் வைத்துப் புல்லி எடுத்து ஆட வேண்டும் என்று நடுவர் ஆணை யிடுவார்.

முரட்டுத்தனமான அல்லது அபாயகரமான ஆட்டம் அல்லது பண்பற்ற நடத்தை இதற்குரிய தண்டனையைத் தருவதுடன், தவறு இழைத்த ஆட்டக்காரரை எச்சரிக்கவோ, தற்காலிகமாக 5 நிமிடங்களுக்குக் குறையாமல், ஆட்டத்தைவிட்டு வெளியேற்றவோ, அல்லது இனி ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேற்றி விடவோ நடுவருக்கு அதிகாரம் உண்டு.

தற்காலிகமாக வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டக்காரர், தன்னை வெளியே நிறுத்தி வைத்த நடுவர் உள்ளே செல்ல அனுமதிக்கும் வரை, நேரக் காப்பாளர் அருகில் அமர்ந்திருக்க வேண்டும். 3. உள்ளே தள்ளிவிடல் (Push in)

பக்கக் கோட்டைக் கடந்து, பந்து முழுவதுமாக வெளியே சென்றுவிட்டால் அதே பந்தை (இல்லையேல் வேறொரு பந்தை), பக்கவாட்டில் கடந்து போன இடத்தில் வைத்து, வெளியே பந்து போக யார் காரணமாக இருந்தாரோ அந்த ஆட்டக்காரருக்கு எதிர்க்குழுவினரில் ஒருவர், அந்தப் பந்தை தரையோடு தரையாக