பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 145

உள்ளே தள்ளி விடுவதைத்தான் உள்ளே தள்ளி விடல் (Push-in) என்கிறோம். அல்லது அடித்தாடியும் அனுப்பலாம். அல்லது அடித்தாடும்போது, உள்ளே தள்ளிவிடும் ஆட்டக்காரர் தள்ளி விடும்போது பக்கக் கோட்டுக்கு முழுமையாக உள்ளேயோ அல்லது வெளியேயோ இருக்க வேண்டும் என்பதில்லை.

தண்டனை ஆட்டத்தில் பந்தை உள்ளே தள்ளிவிடுவதனைச் செய்தவர் தவறு இழைத்தால், எதிர்க் குழுவினருக்கு இந்த வாய்ப்புக் கொடுக்கப்படும். அவர் இரண்டாம் முறையாகத் தானே விளையாடி இருந்தால், அவரது எதிர்க் குழுவினருக்குத் தனி அடி வாய்ப்புக் கொடுக்கப்படும்.

மற்ற யாராவது தவறு இழைத்தால், உள்ளே தள்ளிவிடல் மீண்டும் எடுக்கப்படும். அதே தவறு மீண்டும் நிகழ்ந்தால், எதிர்க்குழுவுக்குத் தனி அடிவாய்ப்பு வழங்கப்படும். 4. 94.5@5th sull-Lib (Shooting Circle)

ஒவ்வொரு இலக்கிற்கும் முன்பாக, 3 அங்குல அகலத்துடன் 4 கெசநீளம் உள்ள வெள்ளை நேர்க்கோடுகளால் ஆக்கப்பட்டு, கடைக் கோட்டில் இருந்து 16 கெசநீளம் கொண்டதாக இருக்கிறது. அந்தக் கோடுகள் 3 அங்குல அகலம் பெற்று, இலக்குக் கம்பங்களை மையமாக வைத்து வரையப்பட்ட கால் வட்டமாக வந்து, கடைக் கோட்டுடன் இணைகின்றன. அந்தக் கோட்டின் வெளிப்புற விளிம்பில் இருந்து (Outeredge) இலக்குக் கம்பங்களின் முகப்புவரை 16 கெசம் இருக்க வேண்டும். இந்தக் கால் வட்டக் கோடுகளாலும், கடைக் கோட்டாலும், சூழப்பட்ட பரப்பே (கோடுகள் உட்பட) அடிக்கும் வட்டம் (Shooting Circle) என்று அழைக்கப்படுகிறது. (அடிக்கும் வட்டம் இனி எல்லா இடங்களிலும் வட்டம் என்றே கூறப்படும்.)

குறிப்பு: ஆடுகளத்தின் கடைக் கோட்டில் உள்ள இலக்கின் மையப் புள்ளியில் இருந்து 7 கெசதுரத்தில் அடிக்கும் வட்டத்தினுள் ஒரு புள்ளி குறிக்கப்படவேண்டும். அதுவே ஒறுநிலை அடி (Penalty stroke) எடுக்கப் பயன்படும் புள்ளியாகும்.

5. பந்து ஆடுகளம் விட்டு வெளியே சென்றால்

(அ) வெற்றி எண் பெறாமல், கடைக் கோட்டைத் தாண்டிப் போக தாக்குவோர் பந்தை வெளியே அனுப்பினாலும், கடைக்கோட்டில் இருந்து 25 கெசதுரம் அல்லது அதற்கு அதிகமான தூரத்தில் இருந்து, தடுக்கும் குழுவினரில் ஒருவர் வேண்டுமென்றே