பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 விளையாட்டுக்களின் விதிகள் >

கடைக்கோட்டைத்தாண்டிப் பந்தை அனுப்பவில்லை என்று நடுவர் &Gl6orngyud, SG)&Gld G(L9 (Defending team) தனி அடிவாய்ப்பைப் பெற, அதனால் ஆட்டம் தொடங்கப் பெறும். எந்தப் பக்கமாகப் பந்து கடைக் கோட்டைத் தாண்டிச் சென்றதோ, அதன் நேர் எதிர்ப் பக்கத்திலிருந்து 16 கெச தூரத்தில் (கடைக்கோட்டில் இருந்து 16 கெசத் தூரத்தின் உள்விளிம்பு) பந்தை வைத்து அடிக்க வேண்டும்.

அடிப்பவரைத் தவிர எல்லா ஆட்டக்காரரும், பந்திலிருந்து 5 கெசத் தூரத்திற்கு அப்பால் நின்று கொண்டிருக்க வேண்டும்.

(ஆ) வெற்றி எண் பெறாதபொழுது, கடைக்கோட்டில் இருந்து 25 கெசத்திற்கு உள்ளாக தடுக்கும் குழுவில் உள்ள ஒருவர், கடைக்கோட்டைத் தாண்டி வேண்டுமென்றே பந்தை வெளியே அனுப்பவில்லை என்று நடுவர் கருதினால், முனை அடி அதாவது முனையில் (Corner) வைத்துப் பந்தை அடிக்கும் வாய்ப்பு எதிர்க்குழுவினருக்குக் கிடைக்கும்.

(இ) தடுக்கும் குழுவில் உள்ள ஒருவர், ஆடுகளத்தினுள் 25 கெசத்திற்கு உள்ளாக கோட்டைத் தாண்டிப் பந்தை அனுப்பினார் என்று நடுவர் நினைத்தால், எதிர்க் குழுவினருக்கு ஒறுநிலை முனை அடி அடிக்கிற வாய்ப்பை வழங்குவார் (Penalty - Corner).

6. (Upsosor old. (Corner Hit)

(அ) எந்தக் கடைக் கோட்டுப் பக்கம் பந்து கடந்து சென்றதோ, அந்தப் பக்கத்தின் கடைக்கோட்டில் அல்லது பக்கக்கோட்டில், முனைக்கொடிக் கம்பத்தில் இருந்து 5 கெசம் வரையில் உள்ள இடத்தில், எங்கேனும் பந்தைவைத்துத்தனி அடி எடுக்கின்ற அல்லது உள்ளே தள்ளி விடுகின்ற வாய்ப்பைத் தாக்கும் குழு ஆட்டக்காரர் பெறுகிறார்.

7. 90 fileoso Qpsosor old (Penalty - Corner)

முனை அடி விதியும் ஒறுநிலை முனை அடி விதியுடன் இயைந்து வரலாம். ஆனால் ஒன்று, தடுப்பவரின் கடைக்கோட்டில் ஏதாவது ஒரு பக்கத்தில் தனி அடிஎடுப்பவர், தான் விரும்பும் ஏதாவது ஒரு இடத்தில் பந்தை வைத்துத் தனி அடியை எடுக்கலாம். ஆனால் அந்த அடிக்கும் இடம், இலக்குக் கம்பத்தில் இருந்து 10 கெசத் தூரத்திற்குள்ளாக இருக்கக் கூடாது.

ஒறுநிலை முனை அடி எடுக்கும் பொழுது இரு குழுவிலும்

உள்ள ஆட்டக்காரர்களின் இடங்கள்: