பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c=- டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 147

ஒறுநிலை முனை அடியை எடுப்பவரைத் தவிர, மற்ற தாக்கும் குழு ஆட்டக்காரர்கள் எல்லோரும் அடிக்கும் வட்டத்திற்கு, கால்களும் கோலும் வெளியே இருப்பது போல, ஆனால் ஆடுகளத்திற்கு உள்ளேயே நின்று கொண்டிருக்க வேண்டும்.

பந்து அடிக்கப்படும் வரை அல்லது தள்ளப்படும் வரை, தாக்கும் குழுவினர் வட்டத்திற்குள்ளே நுழையக் கூடாது. தடுக்கும் குழுவினர் கடைக்கோட்டையோ அல்லது நடுக்கோட்டையோ கடந்து வரக்கூடாது. -

1. ஒறுநிலை முனை அடியால், பந்தை நேராக இலக்கினுள் செலுத்தி, வெற்றி எண் பெற முடியாது. பந்து இலக்கிற்குள் போவதற்கு முன், தாக்கும் குழுவில் உள்ள ஒருவரால்பந்து தரையில் நிறுத்தப்படவேண்டும். (கொஞ்சமும் பந்து அசைவின்றியே இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல).

2. ஒறுநிலை முனை அடி எடுத்தவர், இரு குழுவில் உள்ள எந்த ஆட்டக்காரராவது தொட்டோ அல்லது விளையாடுவதற்கு முன்னர் அவரே பந்து விளையாடவோ அல்லது பந்து அருகில் வரவோ கூடாது. - -

தாக்கும் குழுவினரால் இந்த விதி மீறப்பட்டால், தடுக்கும் குழுவினருக்குத் தனி அடிவாய்ப்பு வழங்கப்படும்.

8. ஒறுநிலை அடி

கீழே காணும் காரணங்களால், ஒரு குழு, ஒறுநிலை அடி (Penalty-Stroke) எனும் தண்டனையைப் பெறுகிறது.

1. விளையாடும் முறைகள் என்ற பகுதியில் உள்ள விதிகளையும் தனி அடிப்பகுதியின் விதிகளையும் அடிக்கும் வட்டத்திற்குள்ளே தடுக்கும் குழு ஆட்டக்காரரில் ஒருவர் வேண்டுமென்றே மீறுகின்ற பொழுதும்.

2. தடுக்கும் குழு ஆட்டக்காரரில் ஒருவர் வேண்டுமென்றே விளையாடும் முறைகள் என்ற பகுதியின் விதிகளை மீறி இருக்கா விட்டால் அந்தப் பந்து இலக்கினுள் சென்றிருக்கக் கூடும், எதிர்க்குழு வெற்றி எண்பெற்றிருக்க முடியும் என்ற நிலை இருக்கிற பொழுதும், தடுக்கும் குழு இலக்குக் காவலனும், தாக்கும் குழு ஆட்டக்காரர் ஒருவரும் இதில் பங்கு பெறுகின்றார்கள்.

ஒறுநிலை அடி (Penalty - Stroke) தாக்கும் குழு ஆட்டக்காரர் ஒருவரால், கடைக்கோட்டின் மையத்தில் இருந்து 7 கெசதுரத்தில்