பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 விளையாட்டுக்களின் விதிகள் *Ec

குறித்துக்கொள்ளவும், ஆட்டம் நிறுத்தப்பட்டநேரத்தைக்குறித்து, ஆட்டத்தில் சேர்த்துத் தருதல் போன்ற பெரும் பொறுப்புடைய வராகவும் இருக்கிறார். -

(அ) ஆட்டத்தைக் கட்டுப்படுத்தவும், விதிகளை நடை முறைக்குக் கொண்டு வந்து ஆட்டத்தை நடத்திக் கொடுக்கவும், இரண்டு நடுவர்கள் (Umpires) உண்டு. ஒவ்வொருவரும் ஆடு களத்தின் ஒரு பக்கத்தை, ஆட்ட நேரம் முழுவதும் கண்காணித்துக் கொள்வார்கள். அத்துடன் பக்கக்கோடு முழுவதையும் தனது கண்காணிப்பின் கீழ் வைத்துக் கொண்டாலும், முனையைப் (Corner) பற்றிய முடிவினை எடுப்பதில், தன்னுடைய பக்கத்தை மட்டுமே அவரவர் பார்த்துக் கொள்வார். .

(ஆ) முறையீட்டுக்காகக் (Appeal) காத்திராமல் தனது முடிவை நடுவர் அறிவிக்க வேண்டும். . . . . .

(இ) கீழ்க்கண்டவற்றிற்கு மட்டுமே நடுவர் விசில்

கொடுக்கலாம்.

1. ஆட்டத்தைத் தொடங்கி வைக்க, ஒவ்வொரு ஆடும் நேரப் பருவத்தை முடித்து வைக்க. -

2. தண்டனையை நிறைவேற்ற, அல்லது மற்ற எந்தக் காரணத்தினாலாவது ஆட்டத்தை நிறுத்தி வைக்க.

3. ஒறுநிலை அடியைத் தொடங்கி முடித்து வைக்க.

4. பக்கக் கோட்டையாவது அல்லது கடைக்கோட்டையாவது பந்து முழுவதும் கடந்து சென்றுள்ளதைத் தேவையானால் சுட்டிக்காட்ட

5. வெற்றி எண் பெற்றதை அறிவிக்க.

6.வெற்றி எண்ணுக்குப்பிறகும் நிறுத்தப்பட்டஆட்டம் மீண்டும் தொடர்வதற்காக. o

(ஈ) தண்டனை கொடுக்கப்படவேண்டிய செயலுக்கு அவசியம் வலியுறுத்தி நடுவர்தண்டனையைக் கொடுக்கவேண்டும். அப்படித் தண்டனையை நிறைவேற்றுவதானால், தவறினால் பாதிக்கப்பட்ட குழு, ஏதாவது பலனை அடைவதாக இருக்க வேண்டும்.

(உ) கருத்து உடன்பாடிருந்தால், ஆட்டத்தின் நேரத்தை நடுவரே கவனித்துக் கொள்ளலாம். அல்லது ஒரு பருவத்தின் (Half)

நேரத்தை மட்டும் ஒருவரும், மறு பருவத்தின் காலத்தை மற்றவரும் கவனித்துக் கொள்ளலாம். ஆட்டம் கட்டாயமாக நிறுத்தப்பட்டால்