பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 விளையாட்டுக்களின் விதிகள் -

அடைவதற்கு, ஒரு பொழுதும் நடுவர் அனுமதிக்கக் கூடாது. விசில் ஊதுவதை நடுவர் செட்டாகப் பயன்படுத்த வேண்டும்.

இந்தக் குறிக்கோளை அடைய நலனடையும் விதியை (Advantage Rule) அதிகமாகப் பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகிறது. சில சமயங்களில் இவ்விதியைப் பின்பற்றி, ஒரு முடிவு எடுக்க சிறிது காலதாமதம் ஏற்படலாம். ஆனால் ஒரு முடிவை எடுக்கும் பொழுதும், அதைக் கொடுக்கும் பொழுதும், தெளிவாகவும் முடிவாகவும் தரவேண்டும். நலன் அடையும் விதியைப் பின்பற்றும் பொழுது, முன்னர் கூறியுள்ள விதிகளை மீறியதெல்லாம் நடக்கவில்லை என்றே நினைத்துக் கொள்ள வேண்டும்.

விதிகளின்படியே ஆட்டத்தை நடுவர் நடத்துகிறார் என்று ஆட்டக்காரர்கள் உணருகிற பொழுதிலேயே, ‘முரட்டாட்டம்’ (Rough play) நின்று போவதைப் பொதுவாகவே காண முடியும். ஒருமுறை ஆட்டத்தின் ஒழுங்கைக் (கட்டுப்பாட்டை) கை நழுவ விட்டுவிட்டால், பிறகு அதை நம் கட்டுக்குள் கொண்டு வருவது மிக மிகக் கடினமாகிவிடும்.

விதிகள் மீறப்படுவதைக் கவனிக்க, சரியான இடத்தில் நடுவர் நின்று கொண்டிருக்க வேண்டியது மிக முக்கியமானதாகும்.

தாக்குதல் அதிகமாக ஆட்டத்தில் இருக்கும்பொழுது, நடுவர் நிற்க வேண்டிய இடமாக - பக்கக் கோட்டிற்கு அருகில் 2-வது காப்பாளருக்கு சம அளவில் (Level) இருக்க வேண்டும். “வட்டத்தின்” உள்ளே பந்து இருக்கும் பொழுது, “தடுத்தல்” (Blocking) போன்ற தவறுகளை, பக்கக் கோட்டிலிருந்து கொண்டு, கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆகவே, வட்டத்தை நோக்கி நடுவர் வந்து கடைக்கோட்டிற்கு அருகில் நின்று கொள்வதுதான் சிறந்த இடம்.

ஆகவே, தொடர்ந்தாற்போல், அங்குமிங்குமாகச் செல்லும் நிலையில் நடுவர் எப்பொழுதும் இருக்க வேண்டும். அத்துடன், ஆட்ட நிலைக்கு ஏற்ப சரியான இடத்தில் நின்று கொண்டிருக்கத் தன்னைப் பயிற்சி செய்து கொள்வதோடு, எல்லா ஆட்டக்காரர்களும் எந்தெந்த நேரத்தில் எங்கெங்கு நிற்பார்கள் என்பதைக் கணிக்கும் தன்மை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

அடிப்பவர் அல்லது இரண்டாவது காப்பாளர் நிற்கின்ற நிலைக்கு ஏற்ப சம அளவில் நிற்கும் தாக்கும் குழுவைச் சேர்ந்த ஒருவரை, அங்குமிங்கும் செல்லாமல், ஒரே இடத்தில் நிற்கும் நடுவரால் பார்க்க முடியாமல் போகலாம். தன் பகுதியில் தாக்குவோரின் வலது கைப்பக்கம்தான் என்றே பொதுவாகக் கருதப்படுகிறது.