பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - விளையாட்டுக்களின் விதிகள் ‘ *Eo

உதைப்பவரே மறுமுறை ஆடுவதற்கு முன்னதாக, மற்ற ஆட்டக் காரரால் ஆடப்படவேண்டும்.

- 4. ஒறுநிலை உதையானது எடுக்கப்படும் பொழுது, தடுக்கின்ற இலக்குக் காவலனையும் உதைக்கின்ற ஆட்டக்காரரையும் தவிர மற்ற

எல்லா ஆட்டக்காரர்களும் இப்பரப்பிற்கு வெளியே நிற்க வேண்டும்

என்ற எல்லையைக் காட்டுகிறது. -

இன்னும் குறியுதை எடுக்கப்படும் பொழுது தடுக்கும் குழுவினரைத் தவிர மற்றத் தாக்கும் குழுவினர் அனைவரும், இப்பரப்பிற்கு வெளியே நின்று கொண்டிருக்க வேண்டும் என்பதையும் இப்பரப்பு சுட்டிக் காட்டுகின்றது.

ஒறுநிலை வளைவு என்பது, ஒறுநிலைப் பரப்பின் ஒரு பகுதி அல்ல. ஒறுநிலை உதை எடுக்கப்படும்பொழுது மட்டும், ஒறுநிலைப் புள்ளியில் இருந்து 10 கெச தூரத்திற்கு அப்பால் எல்லா ஆட்டக்காரர்களும் நின்று கொண்டிருக்க வேண்டும் என்ற எல்லையைச் சுட்டிக் காட்டவே இது பயன்படுகிறது.

(இ) முனைப்பரப்பு (Corner - Area) பக்கக்கோடும் கடைக் கோடும் இணையும் இடத்தில் கொடி ஒன்று ஊன்றப்பட்டிருக்கும் ஒவ்வொரு முனையில் இருந்தும், ஆடுகளத்தின் உட்பகுதியில் ஒரு கெச ஆரத்தில் கால் வட்டப் பகுதி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவே முனைப்பரப்பாகும்.

பயன்: முனை உதை உதைக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தாக்கும் குழுவினர் இந்தக் கால் வட்டப் பரப்பினுள்ளே பந்தை வைத்துத்தான் உதைக்க வேண்டும்.

(ஈ) இலக்கு (Goal) ஒவ்வொரு கடைக்கோட்டின் மத்தியிலும், ஒரு இலக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முனை யிலிருந்தும் சம அளவு (உள் அளவு) தூரம் உள்ளதாக அளவெடுத்து, கடைக்கோட்டின் மையத்தில் 8 கெச தூரத்தில், 8 அடி உயரமுள்ள இரு கம்பங்கள் நிறுத்தப்பட்டு, அதன்மேல் குறுக்குக் கம்பத்தின் உயரத்தை அதன்படி அடிப்பாகத்திலிருந்து அளந்தால், 8 அடி உயரம் இருக்க வேண்டும். இலக்குக் கம்பங்கள், குறுக்குக் கம்பம் இவைகளின் அகலமும் பருமனும் 5 அங்குலத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.

நெடுங்கம்பங்கள், குறுக்குக் கம்பம் மற்றும் தரை இவைகளை இணைப்பது போன்று, இலக்குக்குப் பின்னால், திண்மையான வலை ஒன்று கட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த வலை இலக்கைத் தெளிவாகக் காட்ட சிறப்பாக பயன்படுவதோடன்றி, இலக்குக்