பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 விளையாட்டுக்களின் விதிகள்

பந்தை விழுமாறு செய்வதுதான், முதல் முறை அடித்தெறிதல் தொடங்கும்பொழுது வலப்பகுதியில் இருந்து ஆரம்பித்து, ஒவ்வொரு வெற்றி எண் எடுத்த பிறகும் பக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். 2. இடுப்புக்கும் கீழாக, கைதாழ்ந்துள்ள முறையில்தான் (Under hand) பந்தை அடித்தெறிதல் (Serve) வேண்டும். அப்படி அடித்து எறியும் பந்து, வலைக்கு மேலாகச் சென்று, அடுத்த பகுதியில் உள்ள அடித்தெறியும் அடையாள எல்லைக்கு அப்பால் சென்று விழ வேண்டும். -*

3. பந்து தரையைத் தொடுவதற்கு முன், திருப்பி அனுப்பப்பட வேண்டும்.

4. எந்த ஆட்டக்காரரும், ஒருமுறைக்குமேல் தொடர்ந்தாற்போல் பந்தை அடித்து ஆடக்கூடாது. -

5. அடுத்த குழுவினர் ஆடத் தயாராக இருக்கும் வரை, அடித்தெறிவோர் பந்தை அடித்து எறியக் கூடாது. அவ்வாறு வருகிற பந்தை அடுத்த குழுவினர்திருப்பி அனுப்புவதற்கு முயற்சி செய்தால், அவர்கள் ஆடத் தயாராக இருந்ததாகவே கருதப்படுவார்கள்.

6. விளையாடும் நேரத்தில் வலைக்கோட்டைக் கடப்பதற்கு எந்த ஆட்டக்காரரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

7. முதல் இரண்டாம் ஆட்டத்திற்கு இடையில்2 நிமிடம் ஓய்வும், இரண்டு மூன்றாம் ஆட்டத்திற்கு இடையில் 5 நிமிட ஓய்வு நேரமும் உண்டு.

4. ஆட்டத்தில் நிகழும் தவறுகள் தவறுகள் (Fault): பந்தை அடித்தெறியும் குழுவில் இருந்து யாராவது ஒருவர்தவறு இழைத்தால், அடித்தெறிவோர்.அவ்வாய்ப்பை இழப்பார். எதிர்க்குழுவில் உள்ள யாராவது ஒருவர் தவறு இழைத்தால், அடித்தெறிந்த குழுவுக்கு ஒரு வெற்றி எண் கிடைக்கும்.

கீழே கூறப்படுவன எல்லாம் தவறுகளாகும். (அ) அடித்தெறியும் ஆட்டக்காரர், பந்தை அடித்தெறியும் பொழுது அடிப்பதில் தவறுதல்; நடந்து கொண்டேசர்வீஸ் போடுதல். (ஆ) பந்தை மேலே போட்டு அடித்தல் (Over hand Service) (அதாவது பந்து அடிக்கப்படும் பொழுது அடிப்பவருடைய

இடுப்புக்கு மேல் இருப்பதைத்தான் பந்தை மேலே போட்டு அடித்தல் என்கிறோம்.)