பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP - டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 1.59

(இ) தவறான பக்கத்தில் இருந்து (Wrong court) பந்தை அடித்து எறிதல். - - -

(ஈ) 1. தவறான பகுதியில் பந்து விழுதல், அல்லது. 2. ஏதாவது ஒரு கோட்டின் மேல் விழுதல், (நடுக்கோடு, அடித்தெறியும் அடையாளக்கோடு, பக்க எல்லைக்கோடுகள் உட்பட).

3. அடித்தெறியும் அடையாளக் கோட்டிற்கும் வலைக்கும் இடையில் பந்து விழுதல். -

மேலே கூறியவைகள், அடித்தெறிதலால் பந்தைக் கீழே விழச் (Drop) செய்வதாகும்.

(உ) தன்னுடைய முறை மாறி (Turn) ஒரு ஆட்டக்காரர் பந்தை அடித்தெறிதல், இவருக்கு முன்னால் அடித்தெறிவோர் ஒருவர் அடித்தெறிந்து கொண்டு தவறாகாமல் இருக்க, (Notout) அவருக்கு முன் இவர் முறை மாறி அடித்தெறிதல்.)

(ஊ) அடித்தெறிவோரின் உடலில் எந்த பாகமாவது அல்லது மட்டையாவது அடித்தெறியும் நேரத்தில் கோடுகளில் ஏதாவது ஒன்றைக் கடந்திருத்தல், (ஒரு கால் கோட்டின் மேல் இருந்தாலும், அது கோட்டுக்கு வெளியே என்று கருதப்படும்.) - *

(எ) பந்தை அடித்து எறியும் பொழுதாவது அல்லது திருப்பி அனுப்பும் பொழுதாவது பந்து வலையைத் தாண்டிச் செல்லாது இருத்தல்.

(ஏ) வலையின் உச்சியைப் பந்து தொடுதல்.

(ஐ) மோதல் (Clash) ஏற்படுதல், அதாவது பந்தை அடிக்கும் பொழுது இரண்டு மட்டைகளும் ஒன்றையொன்று தொடுதல்.

(ஒ) ஆட்டக்காரர்கள் தங்கள் மட்டைகளை (Bats) வலைக்கு மேலே கடக்க விடுதல், அல்லது பந்தை அடிக்கும் பொழுது வலைக்கோட்டைத் தொட்டுவிடுதல்.

(ஓ) ஒரே குழுவில் இருந்து, இரண்டு மட்டைகள்

சேர்ந்தாற்போல் பந்தைத் தொட்டால், அதற்கு இருமுறைத் தொட்டாடுதல் (Double Touch) என்று பெயர்.

(ஒள) பந்தை அடிக்கும் பொழுது ஒரு ஆட்டக்காரர் தன்னுடைய மட்டையால் அல்லது உடலால் அல்லது உடையால், வலையையோ அல்லது அதன் உதவி சாதனங்களையோ தொடுதல்.

(க) உடலை அல்லது உடையைப் பந்து தொடுதல்