பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 விளையாட்டுக்களின் விதிகள் -E...

(ங்) ஆடுகள எல்லைகளுக்கு வெளியே பந்தை அனுப்பி விடுதல்.

(ச) பந்தை அடித்தெறியும் பொழுது, ஆட்டக்காரருடைய உடலின் ஒரு பகுதி அல்லது அவருடைய மட்டை ஆடுகளப் பகுதிக்கு வெளியே இருத்தல். (ஒருகால் கோட்டின் மேல் இருந்தாலும் கூட, அது கோட்டுக்கு வெளியே என்றுதான் கொள்ளப்படும்) -

குறிப்பு: அடித்தெறிவதிலோ அல்லது விளையாடும் நேரத்திலோ ஆடுகள எல்லைக்கு வெளியே செல்லும் பந்தை எடுத்தாடுவது அவரவர் விருப்பத்திற்குரியதாகும். அவ்வாறு எடுக்க முயற்சிப்பது (Attempt) பந்தை ஆடியதற்குச் சமமாகும்.

4. பந்தை அடித்தெறிய ஒரு ஆட்டக்காரர் முயன்று செயல் பட்டதிலிருந்து, பந்து தரையைத் தொடுகிறவரைக்கும், அல்லது ஏதாவது ஒரு தவறு நேருகிறவரைக்கும் அல்லது பந்து வலையைத் தொட்டது (Let) என நடுவர் கூறுகிற வரைக்கும் பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கொள்ளப்படும்.

5. போட்டி ஆட்டத்திற்குரிய விதிகள்

1. ஒரு பந்தாட்டப் போட்டி, 3 ஆட்டங்களைக் (Games) கொண்டதாகும். மூன்றில் இரண்டு ஆட்டங்களைத் தமக்குரிய தாக்கிக் கொள்ளும் குழுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். முதன் முதலாக 29 வெற்றி எண்கள் எடுக்கும் குழுவே அந்த ஆட்டத்தில் வெற்றி பெறும். ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவுக்குப் பிறகும், குழுக்கள் தங்கள் பகுதிகளை (Court) மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு, முன் நடந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றக் குழுவே, தொடர்ந்து வரும் ஆட்டத்தில், முதலில் அடித்தெறிவதை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்திற்கு இடையிலும் 5 நிமிட நேரம் இடைவேளை உண்டு. ஒவ்வொரு ஆட்டத்திலும் (Each game) ஏதாவது ஒரு குழு 8, 15, 22 என்ற வெற்றி எண்களை எடுத்துவுடன், தங்களுடைய பகுதிகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

2. பகுதி அல்லது அடித்தெறிதல் வேண்டும் என்பதை, முதலாட்டத் தொடக்கத்திற்கு முன் நாணயத்தைச் சுண்டி எறிவதன் மூலம் முடிவு செய்ய வேண்டும். இதில் வெற்றி பெறும் குழு, அடித்தெறிவதைத் தெரிந்தெடுத்தால், மறுகுழு ஆடுகளப் பகுதியைத் தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டும். (முன்னது பகுதி என்றால், பின்னது அடித்தெறிதலைக் கொள்ள வேண்டும்.)