பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

< டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 161

நாணயம் சுண்டுவதில் வெற்றி பெற்ற குழு விரும்பினால், எதிர்க்குழுவினருக்கு முதலில் எது வேண்டும் என்பதைத் தெரிவு செய்து கொள்ளும் உரிமையைத் தரலாம். முதலாட்டத் தொடக்கத்தில் முதல் முறையாக அடித்தெறிந்து ஆடத் தொடங்கும் (n) குழுவிலே, 5 ஆட்டக்காரர்களும் அடித்தெறியும் வாய்ப்பைப் பெறுவார்கள். அடுத்த குழுவில், ஒவ்வொருவரும் அடித்தெறியும் வாய்ப்பை இழக்க இழக்க, எல்லோருக்கும் (5 பேர்களுக்கும்) அந்த வாய்ப்பு ஒருமுறை கிடைக்கும்.

3. போட்டித் தொடக்கத்திற்கு முன், முன்மாதிரியாகப் பந்தை (Trial Ball) ஆடிப் பார்க்க, இரண்டு முறைதான் அனுமதிக்கப் படுவார்கள். மாதிரி ஆட்டம் முடிந்த பிறகு, ஆடுங்கள் (play) என்று நடுவர் சொல்ல, முறையான ஆட்டம் தொடங்குகிறது.

4. ஒவ்வொரு ஆட்டத்திலும் 2 மாற்றாட்டக்காரர்களை மாற்றிக் கொள்ளலாம். ஆட்ட நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

5. 3 ஆட்டங்கள் ஆடுகிற ஒரு போட்டி ஆட்டத்தில், பந்தை மாற்றிக் கொண்டு ஆட அனுமதியில்லை.

6. ஒவ்வொரு போட்டி ஆட்டத்திற்கும், ஒரு நடுவர், இரு கோடு காப்பாளர்கள், வலைக்கான நடுவர் ஒருவர் (Net referee) இன்னும்

ஒரு குறிப்பாளர் முதலியோர் நியமிக்கப்படுவார்கள்.

7. ஆடுதற்கேற்ற கால நிலையை அறிந்து சொல்லுதற்கும், சிறப்பான அல்லது தரம் இழந்த ஆட்டத்திற்கும், நடுவரே முக்கிய பொறுப்பாளராக இருந்து நடத்திக் கொடுப்பார். அவரது முடிவே இறுதியான முடிவாகும்.

8. எதிர்பார்த்திராத அல்லது தற்செயலாக நிகழும் இடையூறு களுக்காக ஆட்டம் நின்றால், பின் மீண்டும் அடித்தெறியும் வாய்ப்பை (Let) அதே குழுவுக்குத் தந்து, ஆட்டத்தை நடுவர்

தொடங்கி வைப்பார்.

9. பந்து வலையில் பட்டு சரியாக விழுந்தது (Let) அல்லது தவறானது (Fault) என்பனவற்றை மற்ற ஆட்டக்காரர்கள் சுட்டிக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் உடனே கூற வேண்டியது நடுவரின் கடமையாகும்.

10. தவறு என நடுவர் தவறுதலாக அறிவித்துவிட்டு உடனே சரியென்று திருத்திக் கொண்டு, விளையாடுங்கள் என்று சொல்லும்