பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 விளையாட்டுக்களின் விதிகள் *Ec

பொழுது, அப்பொழுது அடிக்கும் ஆட்டக்காரர் பந்தை சரியாகத் திருப்பி அனுப்ப இயலாவிடில், மீண்டும் அடித்தெறிதலால் (அதே வெற்றி எண்ணுக்காக) ஆட்டம் தொடங்கப்பெறும் (Let).

11. விளையாடுங்கள் (play) என்று நடுவர் கூறிய பிறகு ஆட மறுக்கின்ற குழு, ஆட்டத்தை இழக்க நேரிடும்.

12. தொடராட்டப் போட்டியை (Tournament) நடத்துகின்ற சங்கத்தின் இணக்கம் இன்றி, போட்டி ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது எந்த நடுவரையும் மாற்றக் கூடாது.

13.கோடு காப்பாளர்கள்- கோடுகள் பற்றியதில் முடிவு எடுக்கும் உரிமையையும், வலைக்கான நடுவர் வலையைப் பந்து தொட்டதா என்பதில் முடிவு எடுக்கும் உரிமையையும் பெற்றிருக்கின்றார்கள்.

14. வெற்றி எண்களைச் சரியாகக் குறித்துக் கொள்வதுடன், அதைத் தெளிவாகக் கூற வேண்டியது குறிப்பாளரின் கடமையாகும். 15. 11-வது விதியில் கூறப்பட்டதைத் தவிர, ஒரு குழு ஒரு போட்டி ஆட்டத்தில் வெற்றி பெற, ஒன்று விளையாடி இருக்க வேண்டும். அல்லது ஆடாது இருந்திருக்க வேண்டும் (Given out).

ΠΠΠ