பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 1.65

ground) 3 அடி இருக்கும். இரு பக்கங்களுக்கும் சேர்த்து மொத்தம் 6 அடி ஆகும். -

2. பதனிடப்பட்ட அல்லது தார் அடிக்கப்பட்ட கயிற்றால் ஆகிய, 18 அடியில் இருந்து 20 அடிக்குள்ளாக நீளம் கொண்ட, 18 அங்குலம் அகலம் உள்ளதாக வலை இருக்க வேண்டும். வலையின் மேல் உயரத்தில் வெள்ளை நாடாவை மடித்துத் தைத்து, அதனுடே கயிற்றை நுழைத்து கம்பங்களின் மேல் உச்சியில் வைத்துக் கட்டியிருக்கும் வலையின் உச்ச உயரம் 5 அடியாக இருக்க வேண்டும்.

3. வலையை இழுத்துக் கட்டும்பொழுது தாங்குகின்ற வலிமை உள்ள கம்பங்களின் உயரம் 5 அடியாக இருக்க வேண்டும். ஆடுகளத்தின் நடுப்பாகத்தில் வலையின் உயரம் 4.9 ஆக இருக்க வேண்டும்.

குறிப்பு: வலையின் உச்சநிலை உயரம் 5 அடியாகவோ அல்லது 6 அடியாகவோ இருக்கலாம். (சில விதிகள் 5 அடி என்றும், மற்றவை 6 அடி என்றும் கூறும், நாம் பின்பற்றுவது 6 அடி உயரத்தையே.)

2. ஆட்டக்காரர்களும் வளையப் பந்தும்

1. ஒரு பக்கத்தில் ஒருவரோ அல்லது இரண்டு ஆட்டக்காரரோ இருந்து ஆடலாம்.

குறிப்பு: ஒற்றையர் ஆட்டமாக இருந்தால் ஆடுகளத்தின் ஒரு பகுதியையும், இரட்டையர் ஆட்டமாக இருந்தால் ஆடுகளம் முழுவதையும் பயன்படுத்த வேண்டும்.

2.7 அங்குல விட்டமும் 1% அங்குல கனம் உள்ளதாகவும் 6 லிருந்து 9 அவுன்சுக்கு உள்ளாக எடை கொண்டதாகவும் வளையம் இருக்க வேண்டும். 2. விளையாட்டைத் தொடங்கும் முறை

1. நாணயம் சுண்டுவதின் மூலம் ஆடுகளத்தின் பக்கங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். அதில் தோற்றவர்கள் வளையம் எறிவதை (Serving) எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது எதிர்மாறாக எடுத்துக் கொள்ளவேண்டும். முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற குழுவே அடுத்த ஆட்டத்தையும் (Game) தொடங்கவேண்டும். அதில் உள்ள இருவரில் யாராவது ஒருவர் வளையத்தை எறியலாம்.