பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cos” டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 15

காவலனுக்குத் தடையில்லாமல் இயங்கிட வேண்டியவாறு இடம் அளிக்கும் முறையிலும் அமைந்திருக்க வேண்டும்.

குறுக்குக் கம்பத்திற்குப் பதிலாக நாடாவையோ (Tape) அல்லது மற்ற வளைந்து கொடுக்கும் பொருட்களையோ உபயோகிக்கக் கூடாது. - -

இலக்குக் கம்பம் வெள்ளைப் Logo. (White Paint) பெற்றிருக்க வேண்டும். - -

2. விளையாடுவோருக்கு வேண்டியன

1. Luftgo (The Ball) “ -

பந்து உருண்டை வடிவமுள்ளதாகவே இருக்க வேண்டும். ஆடுவோருக்கு அபாயம் விளைவிக்கும் மற்ற எந்தப் பொருள் களாலும் செய்யப்படாமல், பந்தின் மேல் பாகம் தோலால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பந்தின் கனம்: 16 அவுன்சுக்கு மிகாமல் (453 கிராம்) 14 அவுன்சுக்குக் (396 கிராம்) குறையாமல் - ஆட்டம் தொடங்குவதற்கு முன் இருக்க வேண்டும். பந்தின் சுற்றளவு 28 அங்குலத்திற்கு (0.71 மீட்டர்) மிகாமலும் 27 அங்குலத்திற்கு (0.68 மீட்டர்) குறையாமலும், இருக்க வேண்டும்.

ஆட்ட நேரத்தில் நடுவருடைய அனுமதியின்றி வேறு பந்து மாற்றப்படக் கூடாது. -

பந்து ஆட்ட நேரத்தில் காற்றிரங்கி விட்டாலோ அல்லது வெடித்துவிட்டாலோ, அதேபோலவேறொரு பந்தை அதேஇடத்தில் மேலெறிந்து, கீழே விழச் செய்து (Drop), ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

2. விளையாடும் ஆட்டக்காரரின் எண்ணிக்கை (Players)

ஆட்டம் இரு குழுக்களால் விளையாடப் பெறும். ஒவ்வொரு

குழுவிலும் 11 பேர் உண்டு. அவர்களில் ஒருவர் குழுவுக்குக் காவலராக இருப்பார். ஆட்ட நேரத்தில் மற்ற ஆட்டக்காரர்களில் ஒருவரை, இலக்குக் காவலராக மாற்றலாம். ஆனால், அந்த மாற்றத்தைச் செய்வதற்கு முன், நடுவரிடம் அறிவித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

நட்புப் போட்டியில் ஆடுகின்ற ஒவ்வொரு குழுவிற்கும் 3 மாற்றாட்டக்காரர்களை மாற்றிக் கொள்ள அனுமதி உண்டு.