பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 169

இரட்டையர் ஆட்டத்தில், வலது கைப்பகுதியில் இருந்து வளையத்தை எறிந்து, அதில் வாய்ப்பை இழந்த ஆட்டக்காரர் எதிர்க்குழுவில் இருந்து முதன் முதலாக எறியப்படும் வளையத்தைப் பிடிக்க வேண்டும்.அவனது பாங்கன் இடது கைப்பகுதியில் நின்று கொண்டிருக்க (ஏதாவது வந்தால்), இரண்டாவது தடவை இவர் பிடிக்கத் தயாராக இருப்பார். பிடிப்பதில் இருந்து எறிகிற குழுவாகி, முதலில் வளையத்தை எறிந்து, அதில் வெற்றி எண் பெற்று, இடது கைப் பகுதியில் உள்ளவர்க்கு எறிகிறபொழுது தோல்வியுற்றால் அவர் உடனே வலது கைப்பகுதிக்கு மாறிக் கொள்ள வேண்டும். இவ்வாறு

மாறி மாறி நின்று ஆட வேண்டும்.

ஒற்றையர் ஆட்டத்தில், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வளையம் மாறி மாறியே போவதால் அதில் ஒருவர் ஒரு பக்கத்தையே காத்து நிற்பதால் மாற்றுதல் (Change) என்பது தேவையில்லாதது ஆகும். அது முடியாததுங்கூட.

வளையத்தை எறிந்து, ஆட்டம் தொடங்கிவிட்ட பிறகு, மற்ற ஆட்டக்காரர்கள் தங்கள் பகுதியிலே நிற்காமல் (இடது, வலது) அவர்கள் விரும்புகின்ற எந்த இடத்தில் இருந்தும் ஆடலாம். (8-ஆவது விதியைக் காண்க).

2) வளையத்தை ஒரு கையால்தான் பிடிக்க வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு கையைத்தான் பயன்படுத்த வேண்டும். இரண்டு கைகளாலும் வளையத்தைப் பிடிக்க அனுமதி கிடையாது. மீறிச் செய்தால், வெற்றி எண் பெறுவதை இழக்க நேரிடும். ஆட்டக்காரரின் மேலே அல்லது பாங்களின் மேலே (Partner) படும்படியாகவும் அல்லது உடலின் மேல் படும்படியாகவும் வளையத்தைக் கையால் பிடிக்கலாம். ஆனால் வளையம் தரையைத் தொடக்கூடாது. வளையம் எப்பொழுதும் கைகளினாலேதான் எறியப்படவேண்டும்.

வளையம் எறியப்பட்டு வழங்கப்படும் (Serving) நேரத்தைத் தவிர, ஆட்ட நேரத்தில் வளையத்தை இருவரும் ஒவ்வொரு கையினால் பிடிக்க அனுமதி உண்டு. ஆனால் அதை ஒருவர்தான் எறிய வேண்டும். வளையம் ஒருவரால் தொடப்பட்டு, மற்றொருவரால் பிடிக்கப்படுகிறபொழுது, அதைப் பிடித்த ஆட்டக்காரரே மறு பக்கத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.

3) வளையத்தை எறிந்து வழங்கும் போதும், ஆடும்பொழுதும் மேலெழுந்த போக்குள்ளதாக (Upward) எறிய வேண்டும். அது கையை விட்டு நீங்கிய பிறகு குறைந்தது 6 அங்குல உயரமாவது உயர்ந்து இருக்குமாறு செல்ல வேண்டும். அளவுக்கு மீறிக்கைகளை