பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 விளையாட்டுக்களின் விதிகள் *E,

தவிர, அந்த ஆட்டக்காரரும் வளையமும் ஆடுகளத்திற்கு வெளியே உள்ளபொழுது, அவர் வளையத்தைத் தொட்டு, கீழே தவறவிட்டு விட்டால், அவர் அதற்கான வெற்றி எண்ணை இழக்கிறார் என்றே கருதப்படுவார்.

14) வளையத்தை எறிந்து வழங்குதலில், வலையைத் தொட்டுவிட்டு, மறுபக்கம் வளையம் கடந்து செல்லும்பொழுது, யாருக்காக வளையம் எறியப்பட்டதோ, அவர் அதைப் பிடித்துவிட்டால், வளையம் சரியான பகுதியுள் விழுந்ததென்றே கருதப்படும். 7-ஆவது விதியின்படி இரண்டாவது தடவையாக வளையம் எறிந்து வழங்கப்படும்.

15) வளையத்தைக் கையில் தங்க விடாமல், உடனடியாகத் திருப்பி அனுப்பிவிடவேண்டும். வளையத்தைப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பது5-ஆவது விதியின்படி ஏமாற்றுதலாகும் (Baulking).

16) தவறான பகுதியில் இருந்து கொண்டு வளையத்தை எறிந்து வழங்குவதும், அல்லது தன்னுடைய முறை மாறி எறிவதும், அல்லது தவறான பகுதியில் நின்று கொண்டிருக்கும் எதிராளிக்கு வளையத்தை எறிந்து வழங்குவதும் தவறு. அதில் வெற்றி எண்கள் பெற்றிருந்தாலும், பெறாதிருந்தாலும் அவைகள் கணக்கில் சேரா. ஆனால் இவ்வாறு எறிந்து வழங்குவதற்கு முன்னால் பெற்றிருந்த வெற்றி எண்கள் அல்லது தோல்வி எல்லாம் கணக்கில் சேரும். பிறகு, வளையத்தை எறிவதில் நேர்ந்த தவறு திருத்தப்பட்டு, மீண்டும் ஆட்டம் தொடங்கப் பெறும்.

17) வளையத்தைப் பிடித்த அதே கையினால்தான் மறுபக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

4. சில முக்கியக் குறிப்புகள்

1) ஒற்றையர் ஆட்டம் - இரண்டு ஆட்டக்காரர்கள் 21 வெற்றி எண்கள் - 3 சிறந்த ஆட்டங்கள்.

2) இரட்டையர் ஆட்டம் - நான்கு ஆட்டக்காரர்கள் 21 வெற்றி எண்கள்.

3) வழங்கலில், வளையத்தைச் சுற்றித் திருப்பி விடாமல், இயற்கையாகப் பிடித்து ஆட வேண்டும்.

4) வேகமாக அல்லது சுற்றி வருகிற வளையத்தை உடனே கைப்பற்ற எண்ணக்கூடாது. கிரிக்கெட் ஆட்டக்காரர் பந்தைத் தடுக்கும் முறையைப் போல, தளர்ச்சியுற்ற வேகம் கொண்டதாக உன் கைக்கு வளையத்தை வரவிட வேண்டும்.