பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| - விளையாட்டுக்களின் விதிகள் * Eo

1 யாவது இருக்க வேண்டும். ஆடுகளப் பகுதியின் கடைசியில் இருந்துகொண்டு ஆடும்பொழுது, முன்புறமாகவே கையைக் கொண்டு வந்து வளையத்தை எறிந்து ஆடுவது சிறப்புற வேண்டப்படுவதாகும்.

வலைக்கு அருகே இருந்து ஆடும்பொழுது, சாதாரணமாகவும், அல்லது கையை உயர்த்தி வளையத்தை சாமர்த்தியமாகவும் எறிந்து ஆடினாலும், தவறுகளைச் சரியாகக் கண்டுபிடிக்க ஏது உண்டு. கையை முன்புறமாகவே கொண்டு சென்று வளையத்தை எறிந்தாடும் ஆட்டத்தைக் கைக்கொள்ள எத்தனையோ வாய்ப்புகள் உண்டு. முன்னர் சொல்லியபடி வளையத்தை (6 அங்குலத்திற்கு மேலே) மேலெழுந்தவாறு எறிந்து ஆடுகிற ஆட்டத்தில் தவறு ஏற்பட வழியில்லாமல் போகிறது. இதனால் வளையத்தை வாங்கிய அதே கையினாலேயே திருப்பி வேகமாக எறிய எளிதாக இருப்பதினால், அதிகமான வெற்றி எண்கள் பெறுவதற்கு இந்த முறை நன்கு வழி வகுக்கிறது.

இயல்பாகவோ அல்லது சுற்றி விடுதலால் வேகமாகவோ வரும் வளையத்தைக் கண்மூடித் தனமாகப் பிடிக்காமல், கையைப் பின்புறமாக மெதுவாக இழுத்து, அதன் பிறகு பிடிக்க வேண்டும்.