பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 விளையாட்டுக்களின் விதிகள்

ஆட்ட நேரத்திற்கு முன் நடுவரிடம் 5 பேர்களுக்குக் குறையாமல் மாற்றாட்டக்காரர்களின் பெயர்களைக் கொடுத்துவிட வேண்டும். அவர்களில் மூவர் மாற்றாட்டக்காரர்களாக களம் இறங்கலாம்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே ஒரு ஆட்டக்காரர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டால், முன்பு பெயருள்ள மாற்றாட்டக்காரர்களில் ஒருவர் அவருக்குப் பதிலாக ஆட அனுமதிக்கப்படுவார். வேறொரு மாற்றாட்டக்காரரை உள்ளே வரவழைப்பதற்காக ஆட்டநேரத்தைத் தாமதப்படுத்தக்கூடாது.

வெளியேற்றப்பட்ட அந்த ஆட்டக்காரர் அந்த ஆட்டத்தில் மீண்டும் வந்து பங்கு பெற்று ஆட முடியாது.

மாற்று ஆட்டக்காரர் யார் என்பதை நடுவருக்கு முன்பே

அறிவிக்க வேண்டும். பந்து நிலைப் பந்தாக (Dead ball) மாறியவுடன்தான், மாற்றாட்டக்காரரை உள்ளே வர அனுமதிக்க வேண்டும். அதுவும் நடுவரின் அனுமதிக்குப் பிறகே அவர் உள்ளே வரவேண்டும்.

தண்டனை நடுவரிடம் அனுமதி பெறாமல் ஆட்ட நேரத்தில் தன்னை இலக்குக் காவலனாக மாற்றிக் கொண்ட ஒரு ஆட்டக்காரர், ஒறுநிலைப் பரப்பினுள்ளே பந்தைப் பிடித்தால், அதற்குத் தண்டனையாக எதிர்க்குழு ஒறுநிலை உதையைப் பெறும்.

(காயமுற்ற நேரந்தவிர) ஆட்ட நேரத்தில் நடுவரின் அனுமதி யின்றி யாராவது ஒருவர் ஆடும் களத்தை விட்டு வெளியே சென்றால், அவர் முறை தவறி நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுவார்.

எந்தக் காரணத்தினாலாவது ஒரு ஆட்டக்காரர் போட்டி ஆட்டம் நடக்கும் பொழுது, ஆடுகளத்தை விட்டு வெளியே சென்றால், எந்தப் போட்டியில் கலந்து கொண்டாரோ அநீதப் போட்டி ஆட்டம் (Match) முடியும் வரை மற்றொரு போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது. (1939 மார்ச் குழு அறிக்கை) 3. விளையாட்டுச் சாதனங்கள் (Equipments)

பிற ஆட்டக்காரர்களுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய எந்தப் பொருளையும் ஒரு ஆட்டக்காரர் அணிந்திருக்கக் கூடாது. கீழே கூறியுள்ள முறைகளில் அவரது ஆடப்பயன்படும் காலணி (Boot) அமைந்திருக்க வேண்டும்.

காலணியில் உள்ள அடித்தட்டும் (Bar) குமிழ்களும் (Studs) தோலினாலோ அல்லது மென்மையான ரப்பராலோ செய்யப்