பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 விளையாட்டுக்களின் விதிகள் *E

1. ஆடுகளத்தின் அமைப்பு

1. ஆடுகளம் -

வலைப் பந்தாட்டத்தினுடைய (Net Ball) ஆடுகளத்தின் அமைப்பு, நீண்ட சதுர வடிவமுடையது. அதன் நீளம் 100 அடி, அகலம் 50 அடி.

ஆடுகளத்தின் எல்லையைக் குறித்துக்காட்டுகின்ற கோடுகளின் அளவு 2 அங்குலத்திற்கு மேற்படாதவாறு அமைந்திருக்க வேண்டும்.

நீளத்தைக் குறித்துக் காட்டும் கோடுகள் பக்கக் கோடுகள் (Side Lines) என்றும், அகலத்தைக் குறித்துக் காட்டும் கோடுகள் இலக்குக் கோடுகள் (Goal Lines) என்றும் பெயர் பெறுகின்றன.

ஆடுகளமானது இரண்டு கோடுகளால் குறிக்கப்பெற்றதன் மூலம், மூன்று சம விள்ையாட்டுப் பகுதிகளாகப் (Parts) பிரிக்கப் பட்டிருக்கிறது. அந்த மூன்று ஆடுகளப் பகுதிகளுக்கும் தனித்தனியே பெயர் உண்டு.

B(Blll 60 (Centre Third) @so553–60 (Goal Third) sistsp இரண்டு பகுதிகள் ஆடுகளத்திலே உண்டு.

ஒவ்வொரு இலக்குத் திடலிலும், 16 மீட்டர் ஆரம் (Radius) கொண்டு வரையப்பட்ட ஒரு அரை வட்டம் (Semi Circle) உண்டு. அந்த அரை வட்டம் அமைக்கும் ஆரத்தின் புள்ளியாக, ஒவ்வொரு @605(5 Gmi lost solous, L1676 fullb (Middle of the Goal Line) இருக்கிறது.

இவ்வாறு வரையப் பெற்றிருக்கும் அரை வட்டமானது, இலக்கை நோக்கிப் பந்தை எறிய உதவும் எல்லையாக அமைந்து, எறி வட்டம் (Shooting Circle) என்று அழைக்கப்படுகிறது.

ஆடுகளத்தின் நடுவில் நடுத்திடலின் மையத்தில் 3 அடி விட்டமுள்ள ஒரு வட்டம் ஒன்று போடப்பட்டிருக்கிறது. அந்த முழு வட்டமானது மையவட்டம் (Centre Circle) என்று அழைக்கப்படுகிறது.

குறிப்பு: ஆடுகளத்தினைக் குறிக்கும் எல்லையாகப் பயன்படுகின்ற கோடுகள் அனைத்தும், ஆடுகளத்தின் ஒரு பகுதியென்றே ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதால், கோட்டின் மீது பந்து தொட்டால், அது வெளியே போனதாகக் கருதப்படக் கூடாது. ஆடுகளத்தினுள் உள்ளதாகவே நினைத்தாட வேண்டும்.