பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 விளையாட்டுக்களின் விதிகள் *ES

இலக்கினுள் பந்து விழுந்து, மீண்டும் ஆட்டம் தொடங்குகின்ற பொழுதே உள்ளே நுழையலாம். அப்பொழுதும் நடுவர்களிடம் அறிவித்து, அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

இடைவேளை நேரத்தின்போதும், காயத்தால் அல்லது சுகவீனத்தின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டிருக்கும் போதும், ஆட்டக்காரர்களின் ஆடும் இடங்களை (Position) மாற்றிக் கொள்ளலாம்.

3. குழுத் தலைவர்கள்

குழுத் தலைவர்கள் (Captains) இருவரும் நாணயம் சுண்டி எறிந்து முடிவு எடுப்பதில் ஈடுபடுகின்றார்கள். அதில் வெற்றி பெற்றவர், இலக்கு வேண்டுமா அல்லது மைய வட்டத்திலிருந்து முதல் எறி (Centre Pass) எறியும் வாய்ப்பு வேண்டுமா என்று முடிவு செய்வார்கள்.

எடுத்த அந்த முடிவினை, அவர்கள் நடுவர்களுக்கு அறிவிக்க, நடுவர்கள் அதனைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இடைவேளை நேரத்திற்குப் பிறகு, அல்லது ஆட்டக்காரர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தால், அதை நடுவர்களுக்கும், எதிர்க் குழுத் தலைவருக்கும் தெரியப்படுத்தி அவர்கள் விரும்பினால், தம் குழு ஆட்டக்காரர்களின் ஆடும், இடங்களை மாற்றியமைத்துக் கொண்டு ஆடலாம.

4. ஆடுதற்குரிய நேரம்

ஒரு போட்டி ஆட்டத்தின் (Game) மொத்த ஆட்ட நேரம் 4 பகுதிகளாகப் (Quarter) பிரிக்கப்பட்டு, அந்த ஒவ்வொரு பகுதிக்கும் 15 நிமிட நேரம் என்று பகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒன்றாம் இரண்டாம் பகுதிகளுக்கும், மூன்றாம் நான்காம் பகுதிகளுக்கும் இடையில் 3 நிமிட நேரம் இடைவெளி உண்டு.

இரண்டாம் பகுதிக்கும் மூன்றாம் பகுதிக்கும் இடையே வருகின்ற இடைவேளை நேரம் 10 நிமிடமாகும்.

ஒவ்வொரு பகுதியின் (Quarter) ஆட்ட நேரம் முடிந்த பிறகு, இரண்டு குழுக்களும், தாங்கள் ஆடும் ஆடுகளப் பகுதிகளை மாற்றிக் கொண்டு ஆட வேண்டும்.

ஒரே நாளில், ஒரு குழுவானது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஆட்டங்களில் பங்குபெற வேண்டும் என்ற அவசிய