பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 189

நிலையிலிருந்தாலும் அல்லது போட்டி ஆட்டம் ஆடி முடிப்பதற் கேற்ற (அவகாசம்) கால அளவு குறைவானதாக இருந்தாலும், ஆடுதற்குரிய நேரத்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். - அப்பொழுது, ஆட்ட நேரப் பகுதிகளை நான்குக்குப் பதிலாக இரண்டாக ஆக்கிக் கொண்டு, ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடம் ஆட்ட நேரமாகவும், இரண்டு பகுதிகளுக்கும் இடையில் வருகிற இடைவேளையின் நேரத்தை5 நிமிடமாகவும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

இடைவேளைக்குப் பிறகு, குழுக்கள் தங்கள் ஆடுகளத்தின் பக்கங்களை மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும்.

விபத்து அல்லது வேறு பல காரணங்களுக்காக, ஆட்டம் நிறுத்தப்பட்டு, அதனால் ஆடுகின்ற நேரத்தில் இழப்பு ஏற்பட்டால், அந்த இழந்த நேரத்தின் அளவைக் குறித்துக் கொண்டு, குறிப்பிட்ட அந்த ஆட்டப் பகுதியின் (Quarter) ஆட்ட நேரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

‘ஒறுநிலை எறிக்காக (Penalty Shot) மட்டுமே மிகை நேரம் (Extra Time) தந்து ஆடச் செய்யலாம். வேறு எக்காரணத்தை முன்னிட்டும் எந்தக் காரியத்திற்காகவும் மிகை நேரம் தரக்கூடாது.

அகில உலகப் போட்டி ஆட்டங்களை நடத்த இருக்கின்ற நமது நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு, ஆட்டத்தின் ஆட்ட நேரத்தை, அந்தக் குறிப்பிட்ட நாடுகளே நிர்ணயித்துக் கொண்டு முடிவெடுக்கலாம்.

இனி, ஆட்டக்காரர்கள் நின்றாடும் இடங்களையும் நிலை களையும் பற்றிக் காண்போம்.

5. ஆட்டக்காரர்களின் ஆடும் இடங்கள்

ஒரு போட்டி ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர், மைய வட்டத்தில் இருக்கும் ஒரு குழுவின் மைய ஆட்டக்காரரின் (Centre) கையில் பந்தைக் கொடுப்பதற்கு முன்னர், ஆட்டக்காரர்கள் அனைவரும் அவரவர்களுக்குரிய ஆடும் இடங்களில் (Position) போய் நின்று கொள்ள வேண்டும்.

அதனை முழுமையாகக் கண்காணித்து, உறுதி செய்து கொண்ட பின்னரே, ஆட்டம் தொடங்க நடுவர் அனுமதி அளிப்பர்.

ஆட்டக்காரர்கள் எங்கெங்கு நின்று கொண்டிருக்க வேண்டும் என்று இனி விளக்கமாகக் காண்போம்.