பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 191

இலக்குத்திடல் - எறிவட்டம் என்று இருந்தாலும், அமைக்கப்பட்ட இடம் இரண்டுதான்.

1. இலக்குள் எறிவோர் இயங்கும் இடம்: எறி வட்டம் - அதனைச் சார்ந்த இலக்குத் திடல். -

2. இலக்கினைத் தாக்குபவர் இயங்கும் இடம்: எறிவட்டம், அதனைச் சார்ந்த இலக்குத் திடல். -

3. எல்லையில் தாக்குபவர் இயங்கும் இடம்: இலக்குத் திடல், அதனைச் சார்ந்த நடுத்திடல்.

4. மைய ஆட்டக்காரர் இயங்கும் இடம்: இலக்குத்திடல், நடுத்திடல், தன் பகுதியைச் சேர்ந்த இலக்குத் திடல்.

5. எல்லைக் காப்பாளர் இயங்கும் இடம்: நடுத்திடல், அதனைச் சார்ந்த இலக்குத் திடல். -

6. இலக்குக் காப்பாளர் இயங்கும் இடம்: நடுத்திடல், இலக்குத்திடல், தனது எறி வட்டம்.

7. இலக்குக் காவலர் இயங்கும் இடம்: இலக்குத் திடல், எறிவட்டம். -

அந்தந்த குறிப்பிட்ட எல்லையைக் குறிக்கின்ற கோடுகள் எல்லாம் அந்தந்த ஆடும் திடலைச் சேர்ந்தவையாகும்.

2. ஆட்டத்தின் தொடக்கம்

ஒவ்வொரு முறை, இலக்கினுள் பந்து விழுந்து, வெற்றி எண் பெறுகிற பொழுதும் இடைவேளை நேரம் முடிந்த பிறகும், ஆட்டத்தின் தொடக்கம் எப்படிஅமையும் என்றால், இரு குழுக்களின் மைய ஆட்டக்காரர்களில் ஒருவர் மைய வட்டத்திலிருந்து பந்தை எறிய, ஆட்டம் தொடங்கிவிடும்.

ஒவ்வொரு முறை ஆட்டம் தொடங்கும் பொழுதும், மைய ஆட்டக்காரர்களில் ஒருவர் எறியும் வாய்ப்பைப் (Alternately) பெற்று எறிய, இவ்வாறு ஆட்டம் முழுவதும் தொடர்ந்து நடக்கும்.

ஆட்டக்காரர்கள் அனைவரும், அவரவருக்குரிய ஆடும் இடங்களில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்றும், வாய்ப்புப் பெற்ற மைய ஆட்டக்காரர் நடுத்திடலில் உள்ள மைய வட்டத்தினுள் (கோட்டை மிதிக்காமல் முழுமையாக) சரியாக கையில் பந்துடன் நிற்கிறார் என்றும் பார்த்து, உறுதி செய்து கொண்டவுடன் திருப்தி யடைந்த நடுவர், விசில் ஒலித்து ஆட அனுமதி தர வேண்டும்.