பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 விளையாட்டுக்களின் விதிகள் =E,

3. மைய எறி வழங்கல்

விளையாடுவதற்காக, விசில் ஒலித்து நடுவர் அனுமதி வழங்கியவுடன், பந்தை வைத்திருக்கும் மைய ஆட்டக்காரர், கால் இயக்கம் (Foot work) போன்ற விதிமுறைகளுக்குட்பட்டு, மூன்று விநாடி நேரத்திற்குள்ளாக, தனது குழு ஆட்டக்காரரிடம் (Teammate) எறிந்து வழங்க வேண்டும்.

அவ்வாறு எறிந்து தரப்படுகின்ற முதல் எறி வழங்கலை (First pass) நடுத்திடலுள் இருக்கின்ற ஒருவர் அல்லது நடுத்திடலுக்கு அருகில் கால் (வைத்து) ஊன்றி நிற்கின்ற ஒருவர் (இவர்களில் யாரேனும் ஒருவர்) பந்தைப் பிடிக்கலாம் அல்லது தொட்டாடலாம்.

இலக்குத் திடலிலிருந்து நடுத்திடலுக்குள் முதலாவதாக வைக்கின்ற காலை முழுதுமாக எடுத்து வைத்திருக்கின்ற ஆட்டக்காரரே, அந்தப் பந்தைப் பெற்று பிடித்தாடத் தகுதியானவர் என்று கருதப்படுகிறார்.

அவர் தொடர்ந்து பந்தை எடுத்து ஆடுவதானது, அந்த நடுத்திடலில் இருந்தே எறிந்தாட வேண்டும் என்ற முக்கிய குறிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தவறும் தண்டனையும். மேற்கூறிய வழங்கும் விதி

முறையில் தவறினாலும், தவறிழைத்தாலும், எந்த இடத்தில் தவறு நிகழ்ந்ததோ அந்த இடத்திலிருந்து தனிஎறி (Free Pass) வழங்கும் வாய்ப்பை எதிர்க்குழு பெறுகிறது.

யாராலும் தொடப்படாமல் இலக்குத் திடலை (Goalthird) பந்து அடைந்துவிட்டால், எந்த இடத்தில் பந்து நடுத்திடலைக் கடந்து சென்றதோ, அந்த இடத்தில் அதாவது நடுத்திடலுக்குள்ளிருக்கும் இடத்திலிருந்து, தனி எறி எடுக்கப்பட வேண்டும்.

4. முக்கிய விளக்கங்கள் ஆட்டம் தொடங்கியவுடன், பந்தைப் பெறும் உற்சாகத்தில் உணர்ச்சி வேகத்தில் ஆடுகிற ஆட்டக்காரர்கள், அயலிடம் பற்றிய விதிமுறைகளையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். 1. அயலிடம்

தனக்கென்று குறிப்பிடப்பட்டிருக்கும் ஆடுகள எல்லையை விட்டுவிட்டு, பந்துடனோ அல்லது பந்து இல்லாமலோ, வேறு எந்த

அயல் எல்லைக்குள் புகுந்து விட்டாலும், அவர் அயலிடம் (Of-side) ஆகிவிட்டார் என்ற தவறுக்குள்ளாகின்றார்.