பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 விளையாட்டுக்களின் விதிகள்

3. ஆட்டத்திற்குரிய விதிகள் 1. obt-L-G|Bulb (Duration)

ஒவ்வொரு ஆடும் கால அளவும் அதாவது பருவமும் (Period) 45 நிமிடங்களாக, இரு சம பருவங்கள் உடையதே ஆட்டநேரமாகும். இரு குழுவினரும் மனம் ஒத்திருந்தால், கீழ்க்கண்டவாறு ஆட்ட நேரம் மாறிவிடும். மொத்த நேரம் 90 நிமிடம்.

(அ) ஏதாவது ஒரு பருவத்தில் எதிர்பாராமல் நடக்கும் விபத்தினாலும், அல்லது வேறு சில காரணங்களினாலும் நேரம் வீணாகிவிட்டால், அவ்வாறு வீணான நேரத்தை நடுவர் விருப்பப்படி ஆட்ட நேரத்துடன் சேர்த்துத் தரப்படும்.

(ஆ) ஒவ்வொரு பருவத்திலும், ஆட்டத்திற்கு நேரம் இருந்தாலும், முடிவடைந்திருந்தாலும் ஒறுநிலை உதை எடுப்பதற்காக நேரம் சேர்த்துத் தரப்படும்.

இ) இடைவேளை நேரம் 5 நிமிடங்களுக்கு மேற்படக் கூடாது. அதற்கு மேல் தேவையானால் அது நடுவரின் இசைவைப் பொறுத்ததாகும்.

பொதுவாக ஆட்டத்தின் மொத்த ஆடும் நேரம் 90 நிமிடங் களாகும். குறைவான ஆட்டநேரம் தேவையானால் இரு குழுக்களும் இணங்கி மனமொத்துப் போனால், அவ்வாறே குறைத்துக் கொள்ளலாம். அந்த மொத்தக் கால அளவையே இரண்டு சம பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஆடவேண்டும்.

விதிகளுக்குட்பட்ட எந்தக் காரணத்தினாலாவது ஆட்டம் முடியும் தருவாயில், இடையில் நிறுத்தப்பட்டால் அந்த ஆட்டம் முழுவதும் மீண்டும் ஆடப்பெற வேண்டும். 2. ஆட்டத்தின் தொடக்கம் (Begining)

(அ) சுண்டி எறியும் நாணயத்தின் மூலம், ஆடுகளத்தின் ஒரு பக்கம் தேவையா அல்லது நிலை உதை தேவையா என்பதை ஆட்டத் தொடக்கத்தில் நடுவரால் தீர்மானிக்கப்படும். அதில் வெற்றி பெற்ற குழுவானது இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நல்ல வாய்ப்பைப் பெறும்.

ஒவ்வொரு ஆட்டக்காரரும் அவரவர் ஆடுகளப் பகுதியில் நின்று கொண்டிருக்க வேண்டும். நிலை உதை செய்யும் வாய்ப்பைப் பெற்றக் குழுவினரைத் தவிர, மற்ற எதிர்க்குழுவினர் எல்லோரும்