பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 205

அவ்வாறு வெளித் தரையை மிதிக்க நேர்ந்தால், பந்து ஆடுகளத்தை விட்டு வெளியே இருப்பதாகவே கருதப்படும்.

(ஆ) பந்தை எடுத்துப்பிடித்திருக்கும்பொழுது அல்லதுகையில் குறியுடன் வைத்திருக்கும் பொழுது, 3 விநாடிக்குள் இலக்கை நோக்கிப் பந்தை எறிந்துவிடவேண்டும்.

(இ) பந்தை ஆட்டக்காரரிடம் எறிவதற்கும், இலக்கை நோக்கி எறிவதற்கும் எப்பொழுதும் கால் இயக்க விதிகளைக் (Footwork rule) கடைபிடித்தொழுக வேண்டும்.

தண்டனை எந்த இடத்தில் இந்தத் தவறு நிகழ்கிறதோ அந்த இடத்தில் இருந்து, தனி எறி வழங்கும் வாய்ப்பு எதிர்க் குழுவிற்குக் கிடைக்கும்.

(3) தாக்கும் குழு ஆட்டக்காரரால் எறியப்படுகின்ற பந்தானது, இலக்கினுள் நுழைகின்ற தருணத்தில், தடுத்தாடும் குழுவில் உள்ள ஒருவர், குறிப்பிட்டஅந்த இலக்குக்கம்பம் அசைவதற்குக்காரணமாக இருந்துவிட்டால், அதற்குத்தண்டனையாக, ஒறுநிலை எறி எறிகின்ற வாய்ப்பை, பந்து எறிந்த குழுவுக்கு வழங்கப்படும். - -

6. தவறுகளும் தண்டனைகளும்

1. இடித்தாடல் -

எதிர்ாட்டக்காரரின் ஆட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ, அவர் மீது இடித்தாடுகின்ற தொடர்பின்ை (Contact) யாரும் செய்யக் கூடாது. தனியாள் தொடர்பு (Personal contact) ஆட்ட நேரத்தில் எந்த நிலையிலும் ஏற்படவே கூடாது.

(1) தான் தனியாக இருந்து, தடையேதுமில்லாமல் விளையாட வேண்டும் என்பதற்காக. -

(அ) எந்த விதத்திலாவது, எந்த வழியிலாவது எதிராளியை

(பிடித்து) இடித்துத் தள்ளக்கூடாது.

(ஆ) எதிராளியை இடிப்பதோ அல்லது இடறி விடுவதோ

கூடாது. - - -

(2) தான் பந்தைப் பிடித்தாட வேண்டும் என்பதற்காக எதிராளியின் மேல் விழுவதும், வேகமாக மோதி விடுவதும் கூடாது. (3) எதிராளியிடமிருக்கிற பந்தைத் தான் சரியான முறையில் தடுத்தாடவேண்டும் என்பதற்காக. -