பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 விளையாட்டுக்களின் விதிகள் “

(அ) எதிராளி மேல் முழங்கையால் தடுக்கவோ, இடிக்கவோ கூடாது. - f +

(ஆ) எதிராளியைக் கட்டிப் பிடிக்கக் கூடாது. எதிராளிக்குத் தன்னைக் கட்டிப்பிடிக்கப் போகிறார் என்ற உணர்வினைத்துண்டும் முறையிலும் நடந்து கொள்ளக் கூடாது.

(இ) எதிராளியைப் பிடித்துத் தள்ளக்கூடாது. (ஈ) எதிராளி மேல் மோதித் தள்ளக்கூடாது. உயரே தாவிப் பிடிக்கும்போதுகூடமோதித் தள்ளக் கூடாது.

(4) பந்தை எதிராளியிடமிருந்து கவர்ந்துவிடவேண்டும் என்ற தனது முயற்சிக்காக, எதிராளிகளின் கைகளிலிருந்தோ அல்லது அவரின் உடலின் ஏதாவது ஒரு பகுதியிலிருந்தோ பந்தைப் பறித்து விடக்கூடாது. -

(5) எந்தித்தருணத்திலும், எந்தவிதத்திலும், எந்தநிலையிலும்

எதிராளியைத் தொடவோ, இடிக்கவோ உடல் தொடர்புகொள்ளவோ

கூடாது.

(6) பந்தைத் தொட்டாடுதல்: ஒரு ஆட்டக்காரர், பந்தைத் தன் கையில் வைத்திருக்கும்பொழுது, எதிராளி ஆட்டத்திற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படும் வகையில், எதிராளியைத் தொடுவதோ அல்லது பிடித்துத் தள்ளுவதோ கூடாது.

2. தடைகள்

பந்து வைத்திருக்கும் எதிராளியின் ஆட்ட இயக்கத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்தால், அது வழியடைக்கும் தடையாகிவிடும். பந்து வைத்திருக்கும் எதிராளியிடம் 3 அடி தூரத்திற்குள்ளாக நெருங்கிச் சென்றாலே, அது தடையாகி விடும். அந்த 3 அடி இடைவெளி (Distance) தூரம் என்பது, தடுப்பவரின் முன் வைத்த கால் இருக்கும் இடத்திலிருந்து, தடுக்கப்படுபவரின்

முன்னால் உள்ள கால் வரையிலும் உள்ள இடைப்பட்டதுரமாகும்.

(அ) ஒரு கால் தரையில் இருப்பது போல் ஒரு ஆட்டக்காரர் பந்தை அடைகிறபொழுது, அல்லது தாவிக் குதித்துப் பந்தைப் பெறும்பொழுது, ஒரு காலை ஊன்றித் தரையில் நிற்கிறார் என்றால், அந்தத் தாக்கி ஆடும் ஆட்டக்காரரின் (Attacker) காலுக்குள், தடுப்பவரின் எந்தக் கால் அருகாமையில் இருக்கிறதோ, அந்தக் காலுக்கும் இடையில் உள்ள துரமே நிர்ணயிக்கப்பட வேண்டிய இடைவெளித் தூரமாகும்.