பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 19

நிலை உதை உதைக்கப்படும் வரை பந்தில் இருந்து 10 கெச தூரத்திற்கு அப்பால் நின்றிருக்க வேண்டும்.

நடுவரின் விசிலுக்குப் பிறகு ஆடுகளத்தின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிலைப் பந்தை (Stationary Ball) ஒரு ஆட்டக்காரர் எதிராளியின் பகுதிக்குள் உதைக்க, ஆட்டம் தொடங்குகிறது.

அப்படி உதைக்கப்பட்ட பந்து அதன் சுற்றளவு முழுவதையும் ஒருமுறை உருண்டு கடந்தாலொழிய, ஆட்டம் தொடங்கியதாகக்

கருதபபட மாடடாது.

மற்ற ஆட்டக்காரர் பந்தைத் தொட்டு ஆடிய பிறகே ஆட்டம் தொடங்கும். மேலே சென்ற பந்தை மற்றவர் ஆடுவதற்கு முன், முதன் முதலில் பந்தை உதைத்த ஆட்டக்காரரே இரண்டாம் முறையாக ஆடக் கூடாது.

(ஆ) ஆட்ட நேரத்தின்போது ஒரு குழு வெற்றி எண் (Goal) பெற்ற பிறகு, வெற்றி எண் பெறத் தவறிய குழுவினரால் மேற்கூறிய முறையில் மறுபடியும் ஆட்டம் தொடங்கி வைக்கப்படும்.

(இ) இடைவேளைக்குப் பிறகு, இரு குழுக்களும் தங்கள் பகுதிகளை ஆட்ட ஆரம்பத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். முதலில் நிலை உதை எடுத்த குழுவின் எதிர்க்குழுவினர் நிலை உதை எடுக்க மீண்டும் ஆட்டம் தொடங்கும்.

தண்டனை: இந்த விதியை மீறினால் நிலை உதை மீண்டும் எடுக்கப்படும். நிலை உதையை உதைத்த ஆட்டக்காரரே, மற்ற ஆட்டக்காரர் தொட்டோ அல்லது விளையாடவோ செய்யாத பந்தைத் தானே மீண்டும் ஆடினால், அதற்குத் தண்டனையாக எதிர்க்குழுவினருக்கு மறைமுகத் தனியுதை உதைக்கும் வாய்ப்புத் தரப்படுகிறது. எந்த இடத்தில் அந்தத் தவறு நிகழ்ந்ததோ, அதே இடத்தில் தான் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். இப்படிப் பெறுகின்ற தனி உதையால் (Indirectfree kick) இலக்கினுள் நேராகப் பந்தைச் செலுத்தி வெற்றி எண் பெற முடியாது. +

(ஈ) எதிர்பாராத வகைகளால் தற்காலிகமாக ஆட்டத்தை fig).5lssol L 15||DS (Temporary Suspension): Sollasslo குறிப்பிடப்படாத காரணங்களால் எதிர்பாராத விதமாக நின்றுவிட்ட ஆட்டத்தைத் தொடங்க - ஆட்டம் நின்றுபோன நேரத்தில் பந்து எங்கு இருந்ததோ, (பக்கக் கோட்டுக்கும் கடைக்கோட்டுக்கும் வெளியில் போகாமல் ஆடுகளத்தின் உள்ளே இருந்தால்) அதே இடத்தில் பந்தை மேலே உயர்த்தி எறிந்து நடுவர் கீழே விழச்