பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 விளையாட்டுக்களின் விதிகள் =

அதே சமயத்தில், எறிந்த பந்தைத் தடுப்பதற்காக, கைகளை நீடித்தடை செய்தால் அது இடையூறு விளைவிக்கும் தடுத்தாடல் என்று தீவறாகாது. தாராளமாகத் தடுத்தாடலாம்.

ஒரு எதிராட்டக்காரர். பந்தைத் தன் கையில் இவத்திருக்கும் போது அல்லது பந்து இல்லாமல் இருக்கும்போது, அச்சுறுத்தும் வகையில், தனது அங்க அசைவுகளாகிய (Movements) இயக்கங்களை மேற்கொள்வாரானால், அவரே இடையூறு விளைவிக்கும் தடுத்தாடலைச்செய்கிறார் என்றே கொள்ளப்படும். o

தண்டனை: (அ) இது வட்டத்திற்கு வெளியே நிகழ்ந்தால், எதிர்க்குழுவிற்கு ஒறுநிலை வழங்கல் (Penalty Pass) sumLL; வழங்கப்படும். o - +

(ஆ) இது வட்டத்திற்கு உள்ளேநிகழ்ந்தால்,இலக்குள் எறிபவர் அல்லது இலக்கினைத் தாக்குபவர் ஆகிய இருவரில் யாராவது ஒருவதத்கு ஒறுநிலை வழங்கல் அல்லது ஒறுநிலை எறி எறியும் வாய்ப் வழங்கப்படும்.

மேற்கூறிய ஒறுநிலை வழங்கல் அல்லது ஒறுநிலை எறி நிகழும்போது அந்தத் தண்டனையானது. தவறு நிகழ்ந்த இடத்திலிருந்தே நிறைவேற்றப்படும். f .

பந்தை எறிபவரது (Thrower) கையை விட்டுப் பந்து போகும் வரையில், தவறு செய்தவர், அந்த எறியாளரது பின்புறம் சென்று ஆட்டத்தில் ஆடுவதற்கேற்ற எந்தவித முயற்சியும் எடுக்காமல் நின்று கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பு: அந்தப் பரப்பெல்லைக்குள் ஆடுவதற்கேற்ற உரிமையுள்ள எந்த ஆட்டக்காரரும், தண்டனை எறியை எடுக்க அனுமதியின்டு. எறிகின்ற ஒறுநிலை எறியரனது, எதிராளிகளால் தடுத்தாடும் முயற்சி மேற்கொள்ளப்படாமல், நிறைவேற்றப்படும். 4. விபத்துக்கள் - -

விபத்துக்காகவோ அல்லது ஏதேனும் ஒரு காரணத்துக்காகவோ ஆட்டம்நிறுத்தப்பட்டால், ஆட்டம் நிறுத்தப்படும்பொழுதுபேந்து எந்த இடத்தில் இருந்ததோ, அங்கிருந்தே மீண்டும் ஆட்டத்தைத் தொடர வேண்டும். - -

இடையில் ஆட்டம் நிறுத்தப்பட்டிருந்த நேரத்தின் அளவைக் குறித்துவைத்துக்கொண்டு, ஆட்டம் தொடங்கியதும், அந்த நேரப் பகுதியில் (Quarter or Half) இழந்த நேரத்தைச் சேர்த்து ஆடவிட வேண்டும்.