பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

< டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 209

ஆட்டக்காரர் மேல் தொட்டாடுதல் அல்லது இடையூறுடன் தடுத்தாடும் முறையில் விபத்து நேர்ந்திருந்தால், தவறுக்குரிய தண்டனையை வழங்கிவிட்டு மீண்டும் ஆட்டம் தொடரவேண்டும்.

ஆட்டம் நிறுத்தப்படுகின்றபொழுது, பந்தை யார் வைத்திருந்தார்கள் அல்லது பந்து எந்த இடத்தில் கிடந்தது என்பதை நடுவர் உறுதியாகத் தீர்மானிக்க முடியாது போனால், ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, பந்து எங்கே கிடந்தது என்பதை முடிந்தவரை நிர்ணயித்து, அந்த இடத்திலாவது அல்லது அதன் அருகிலாவது தீர்மானித்து, அந்தப் பரப்பெல்லைக்குள் ஆடும் உரிமை பெற்ற எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இரு ஆட்டக்காரர்களைக் கொண்டு, மேல் எறி எறிந்து ஆட்டத்தைத் தொடர வேண்டும்.

7. ஆட்ட அதிகாரிகள்

நடுவர்கள், குறிப்பாளர்கள், நேரக் கண்காணிப்பாளர்கள் எனப் பணியாற்றும் அனைவரும், அகில உலகப்போட்டிகளில், பெண்களே பொறுப்பேற்றிருக்க வேண்டும். - நடுவர்கள்: ஆட்டத்தைக் கண்காணிக்கவும், முடிவினைத் தரவும், இரண்டு நடுவர்கள் போட்டியின்போது இருப்பார்கள்.

நடுவர்களின் முடிவே (தீர்ப்பே) இறுதியானது. அந்த முடிவும், யாருடைய முறையீடும் (Appeal) இன்றியே வழங்கப்படும்.

(அ) ஒவ்வொரு நடுவருக்கும் ஆடுகளத்தின் ஒவ்வொரு

பகுதியைக் கண்காணிக்கவும், அந்தப் பரப்பெல்லையில்

நடைபெறும் செயல்களுக்கான முடிவினை கொடுக்கவும் பூரண உரிமை உண்டு. இந்த நடைமுறை சாத்தியக் கூறுக்காகவே, ஆடுகளத்தின் பக்கக் கோடுகள் இரண்டின் நடுவிடத்தில், ஆடுகளத்தை இரண்டாகப் பிரிக்கின்ற கோடானது, இட்டு பகுக்கப்பட்டிருக்கிறது. - +

(ஆ) ஒரு பக்கக் கோட்டின் முழுப் பகுதியைக் கண்காணித்து, அங்கு நடக்கின்ற செயல்முறைக்கேற்ப, உள்ளெறிதல் போன்ற வற்றிற்கான முடிவினைத்தரவும், அதற்குப்பிறகு இலக்குக்கோட்டின் ஒரு பகுதியையும், அங்கிருந்த ஒவ்வொரு முறை பந்து இலக்கினுள் நுழைந்து வெற்றி எண் பெற்ற பிறகு ஆட்டத்தை மறுபடியும் தொடங்குகின்ற வாய்ப்பினையும் வழங்குகின்ற முடிவினையும் ஒரு நடுவர் கொடுக்க வேண்டும்.