பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 விளையாட்டுக்களின் விதிகள் *ES :

- (இ) ஒரு நடுவர், அந்தப் போட்டி ஆட்டம் தொடங்கி முடியும் வரை, அவர் கண்காணிக்கின்ற ஆடுகளத்தின் அந்தப் பாதிப் பகுதியையே நிர்வகிக்க வேண்டும். -

(ஈ) ஆட்டத்தினைக்கண்காணிப்பதற்கான பார்வை புலப்படும் வரை, வெளியே நின்று கண்காணிக்கலாம். நன்றாகப் பார்வைக்கு ஆட்டம் தெரியும் நிலையினில் கண்காணிக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டாலும், மேலெறி நிகழ்த்தவேண்டியிருந்தாலும், அப்பொழுதுதான் ஆடுகளத்தின் உள்ளே செல்லலாமே தவிர, மற்ற

நேரங்களில், ஆடுகளத்திற்கு வெளியே இருந்துதான் ஆட்டத்தை.

நடத்தித்தர வேண்டும்.

(உ) பக்கக் கோட்டின் பக்கமாகப் பந்து செல்லும் திசையைத்

தொடர்ந்தும், இலக்கு வட்டத்தினுள் பந்தாடப்படும் பொழுது

இலக்குக்கோட்டுக்குப்பின்புறமாக இருந்து கண்காணிப்பதற்காகவும்,

எப்பொழுதும் இயக்கத்திலேயே (Moving) நடுவர் இருக்கவேண்டும்.

(ஊ) தான் கண்காணிக்க வேண்டிய ஆடுகளப் பகுதியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்காது, மற்ற ஆடுகளப் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் தெரிந்து வைத்திருந்து, அடுத்த நடுவர் தேவையானபோது, கேட்கும் நேரத்தில் உரிய முடிவினை எடுத்துத் தரவும் தயாராக இருக்க வேண்டும்.

(எ) எந்த ஒரு தவறிழைத்த போதிலும், அந்தத் தவறினால் எதிர்க்குழு பாதிக்கப்படாமல், தவறிழைத்த குழுவே, முன்னேறும் வாய்ப்பையே இழக்கும் நிலையிலிருந்தால் (Dis-advantage)அதற்காக, அந்தத் தவறிழைத்தக் குழுவுக்குத் தண்டனை தர வேண்டிய அவசியமில்லை. -

ஆகவே, நடுவர்கள் நிலையறிந்து, இடமறிந்து, தவறினைக் களைந்து, தண்டனையளித்து, தரமான முறையில் நடத்திச் செல்ல வேண்டும். - - -