பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 விளையாட்டுக்களின் விதிகள் *ES

செய்யும் பொழுது (Toss) ஆட்டம் மறுபடியும் தொடங்கும். மேலே தூக்கி எறியப்பட்ட பந்து தரையை வந்து தொட்டவுடன் ஆட்டம் ஆரம்பமாகும். கீழே விழச் செய்த (Drop) எந்த ஆட்டக்காரராலும் தொடப்படாமல் பக்கக் கோட்டிற்கு அல்லது கடைக்கோட்டிற்கு வெளியே சென்றால், நடுவர் மீண்டும் பந்தை உயர்த்தி எறிய ஆட்டம் தொடங்கும். கீழே விழுமுன், எந்த ஆட்டக்காரரும் பந்தைத் தொட்டு விளையாடக் கூடாது. விதிகளின்படி, இச்செயல் நடைபெறாவிட்டால், நடுவர் மீண்டும் பந்தை உயர்த்தி எறிவார்.

ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமமாக முடிந்தால் (Draw) மிகை நேரம் (Extra Time) தேவையாக இருந்து ஆட்டத்தைத் தொடங்க வேண்டுமானால், ஆட்ட நேர முடிவிற்குப் பிறகும் மிகை நேர ஆட்டம் தொடங்குவதற்கிடையில் உள்ள இடைவேளை நேரம் நடுவரால்தான் தீர்மானிக்கப்படும். மிகைநேரம்: 15-15 மிகை நேரத்தில் அடிக்கப்படும் (Goal) வெற்றி எண்ணிற்கு (Golden Goal) 6T6&TijLIGib.

மிகைநேரப் பகுதியில் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க, மீண்டும் நாணயத்தைச் சுண்டி எறிந்து, ஆடுகளத்தின் ஒரு பக்கமா அல்லது நிலை உதையா என்பதைக் குழுத் தலைவர்கள் (Captains) நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதற்குரிய ஆட்ட நேரத்தை இரண்டு சம பாகமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

3. Lig, Gleus flou Glscorpirso (Ball in and out of play)

(அ) நடுவரால் ஆட்டம் நிறுத்தப்பட்டிருந்தால், கீழ்க்கண்ட முறைகளில், பந்து மீண்டும் ஆடப்படுகின்ற தகுதியைப் பெறுகின்றது (Balin)

(ஆ) இலக்குக் கம்பத்தில், குறுக்குக் கம்பத்தில் அல்லது முனைக்கொடிக் குச்சியில் பந்து மோதி ஆடுகளத்தை விட்டு வெளியே போகாமல் திரும்பி வந்தாலும்.

(இ) ஆடுகளத்தினுள் நின்று கொண்டிருக்கின்ற நடுவர் அல்லது கோடு காப்பாளர்கள் (Linesmen) மீது பந்து பட்டு திரும்பி வந்தாலும். (ஈ) விதிகளை மீறிய நிகழ்ச்சிகளில், எந்தவிதமான முடிவும் கூறப்படாத நேரங்களிலும்,

ஆட்டத் தொடக்கத்திலிருந்து ஆட்டம் முடியும் நேரம் வரை, எல்லா நேரத்திலும் பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும். கடைக்கோட்டுக்கு வெளியே பந்து மேலேழுந்தவாறாகச் சென்று (இலக்கினுள் சென்றது என்பதைத் தவிர) பின்னர்