பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 219

9. எதிர்க் குழுவினரால் பிடிக்கப்பட்ட பாடிச் செல்பவர், அவர்களின் பிடியிலிருந்து தப்பித் தன்னுடைய பக்கத்துக்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தால், அவரை உடனே மறு குழுவினர் விரட்டித் தொடக்கூடாது. - -

10. எதிர்க்குழுவினரின் பகுதிக்கு ஒரே ஒருவர்தான் பாடிச் செல்லலாம். ஒருவருக்கு மேலாக பலர் பாடிச் சென்றால், அவர்கள் எல்லோரையும் திரும்பிப் போகுமாறு நடுவர் ஆணையிட்டுவிட்டு, அவர்களின் பாடிச்செல்லும் வாய்ப்பு முடிந்ததென்று கூறிவிடுவார். அவர்களால் தொடப்பட்ட எதிர்க்குழுவினர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் (Not out). இவ்வாறு பலராகப் பாடி வந்த ஆட்டக் காரர்களைத் தொடர்ந்து சென்று எதிர்க்குழுவினர் விரட்டித் தொடக்கூடாது. -

11. ஒரு குழுவில் ஒருவருக்கும் அதிகமாகப் பலர் பாடிச் செல்லும்போது, நடுவர் அவர்களை எச்சரிக்கை செய்வார். எச்சரிக்கைக்குப் பிறகு, அதே தவறை மீண்டும் செய்தால், முதன் முதலில் பாடிச் சென்றவரைத் தவிர, பாடிச் சென்ற மற்ற ஆட்டக்காரர்கள் அத்தனை பேரும் வெளியேற்றப்படுவார்கள் (Out).

12. எதிர்க் குழுவினருக்குரிய பக்கத்தில் (Court) Limiq கொண்டிருக்கும் பொழுது, பாடும் மூச்சை விட்டு விடுகிற பாடுகிறவர், வெளியேற்றப்படுவார். -

13. பாடி வந்தவரைப் பிடிக்கும் பிடிப்பவர்கள் (Antis) அவர் வாயைப் பொத்திப் பாடும் மூச்சை இழக்கச் செய்வதோ, பெரிய காயங்கள் ஏற்படுகிற அளவுக்கு அவரை அழுத்திப் பிடித்து இழுப்பதோ, காலைப் பின்னிக் கத்திரிக்கோல் பிடி போட்டு மடக்குவதோ, இன்னும் முரட்டுத்தனமான காரியங்களில் ஈடுபடுவதோ கூடாது. அப்படி ஏதாவது நேர்ந்தால், பாடி வந்தவர் தப்பினார் (Safe) என்று நடுவர் அறிவித்து விடுவார். (இதற்குரிய தண்டனையை ஆட்ட அதிகாரிகள் என்ற பிரிவில் 3-ஆவது விதியைக் காண்க.) - -

14. பாடிவருபவரோ அல்லது பிடிப்பவரோவேண்டுமென்றே

எதிராளியை ஆடுகளத்திற்கு வெளியே வலிந்து தள்ளக்கூடாது. யார் முதலில் தள்ளுகிறாரோ, அவர் வெளியேற்றப்படுவார்.பாடிவந்தவர் இப்படித்தள்ளப்பட்டால், அவருடைய பக்கத்துக்குப் பத்திரமாகப் போய்ச்சேர்ந்தார் என்று நடுவர் அறிவிப்பார்.

15. பாடி வந்தவர் எதிர்க் குழுவினருக்குரிய பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் வரைக்கும், பிடிப்பவர்கள் யாரும் நடுக்கோட்டைக்