பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 விளையாட்டுக்களின் விதிகள் =

1. ஆடுகளத்தின் அமைப்பு 1. 29 மீட்டர் நீளமும் 16 மீட்டர் அகலமும் கொண்ட கோ-கோ ஆட்டத்தின் ஆடுகளம் ஒரு நீண்ட சதுர வடிவமுள்ளதாகும். ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்களுக்குரிய ஆடுகளத்தின் அளவு நீளம் 29 மீட்டர், அகலம் 16 மீட்டர், இளஞ்சிறார்களுக்கு (Subjuniors) உரிய ஆடுகளத்தின் அளவு நீளம் 25 மீட்டர், அகலம் 14

2. அ, ஆ, என்பது இரண்டு நீண்ட சதுரங்கள், ஒரு நீண்ட சதுரம் என்பது ஆடுகளத்தின் அகலமான 16 மீட்டர் நீளமும், 2.75 மீட்டர் அகலமும் கொண்டதாகும். (இளஞ்சிறார்கள் 2.55 மீட்டராகும்).

3. M.N என்ற இடங்களில் இரண்டு மரக் கம்பங்கள் (POSTS) நடப்பட்டிருக்கும்.

4. C.D. என்ற நடுக்கோடு 23.50 மீட்டரும் 30 சென்டி மீட்டர் அகலமும் உடையதாகும். அந்த நடுக்கோட்டில் 30 சென்டி மீட்டர் நீளமும் 30 சென்டி மீட்டர் அகலமும் கொண்டதாக 8 சிறு சதுரக் கட்டங்கள் உண்டு. ஒரு சதூக்கட்டத்தின் மையத்திற்கும் மறு சதுரக்

கட்டத்தின் மையத்திற்குமுள்ள தூரம் 2.30 மீட்டராகும். (இளஞ் சிறார்கள் 190 சென்டிமீட்டராகும்.)

5. ஆடுகளத்தினுள், 8 குறுக்குக் கோடுகள் நடுக்கோட்டைக் கடந்து செல்கின்றன. அந்த ஒவ்வொரு குறுக்குக் கோடும் 16 மீட்டர் நீளமும், 30 சென்டி மீட்டர் அகலுமும் கொண்டதாக இருக்கும். நடுக்கோட்டால் பிரிக்கப்படுகின்ற குறுக்குக் கோட்டின் சரிபாதி (அதாவது நடுக்கோட்டிலிருந்து கடைக்கோடு வரை) 7.85 மீட்டராகும். (இளஞ்சிறார்கள் 6.85 மீட்டராகும்.)

2. விளையாட்டு பற்றி விளக்கங்கள்

1. கம்பங்கள்: படத்தில் காட்டியுள்ளபடி M.N. என்ற இரு இடங்களிலும், இரண்டு கம்பங்கள் நடப்பட்டிருக்கும். அவைகள் தரைக்கு மேலே 120 சென்டிமீட்டர் முதல் 125 சென்டிமீட்டர் உயரம் உள்ளதாகவும், 9 லிருந்து 10 சென்டி மீட்டருக்குள்ளான விட்டம் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

2. நடுக்கோடு: M.N. என்ற இரு கம்பங்களுக்கிடையே 23.5o மீட்டர் நீளமும், 30 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக விளங்கும் நீண்ட சதுரமே நடுக்கோடு (Central lane) எனப்படும்.