பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 229

3. குறுக்குக் கோடுகள்: நேர்க்கோணத்தில், ஒரே அளவு கொண்டஇடைவெளியுடன், நடுக்கோட்டைக் கடக்கும் ஒவ்வொரு நீண்ட சதுரத்தின் நீளம் 16 மீட்டராகவும், அகலம் 30 சென்டி மீட்டராகவும் இருக்கும். இக்குறுக்குக் கோடுகள் (Cross lane) நடுக்கோட்டால் இரண்டு சரிபாதியாகப் பிரிக்கப்படுகின்றன.

4. சதுரக் கட்டம்: நடுக்கோடும் குறுக்குக் கோடும் சந்திக்கும் இடங்களில் எல்லாம் 30 சென்டி மீட்டர் : 30 சென்டி மீட்டர் என்ற அளவுள்ள பகுதிகள் ஏற்படுகின்றன. இதற்கு சதூக்கட்டம் (square) எனப்பெயர் உண்டு. ஆடுகளத்தில் மொத்தம் 8 சதூக்கட்டங்கள் உண்டு. - - - -

5. கம்பக்கோடு: குறுக்குக் கோடுகளுக்கு இணையாக கம்பத்தின் மையப் புள்ளியின் வழியாக ஒரு கோடு செல்கிறது. eigsb, &lbuGss(5) (The line of the post) sists. IGLuff.

6. நீண்ட சதுரம்: கம்பக்கோட்டிற்கு வெளியே கடைக் கோட்டிற்கு உள்ளேயுள்ள பகுதி முழுவதும் நீண்ட சதுரம் (The rectangle) என்று அழைக்கப்படும்.

7. எல்லைகள்: நடுக்கோட்டிற்கு இணையாக அதிலிருந்து இரு பக்கங்களிலும் 7.85 மீட்டர் (6.85) தூரமுள்ளதாக இருக்கும் இரண்டு பக்கக் கோடுகளும், இரு நீண்ட சதுரங்களின் வெளி எல்லையைக் குறிக்கும் கோடுகளும் சேர்ந்து, ஆடுகளத்தின் எல்லைகளை (The limits) அமைக்கின்றன.

8. விரட்டுவோர். சதூக்கட்டங்களில் உட்கார்ந்திருக்கும் ஆட்டக்காரர்கள் 8 பேரும் விரட்டுவோர் (Chaser) ஆவார்கள்.

D. solTLGG6 msir (An active chaser): எதிர்க்குழுவைச் சேர்ந்த ஓடும் ஆட்டக்காரர்களைத் தொடர்ந்தோடி, அவர்களைத் தொடும் நோக்கத்துடன் ஓடுகின்ற விரட்டுவோனை ஓடி விரட்டுவோன் என்று அழைப்பார்கள்.

9. ஒடுவோர். விரட்டுகின்ற குழுவின் எதிராளிகள் எல்லோரும்

விரட்டப்படுகின்ற ஓடுவோர் (Runners) ஆவார்கள். -

10. ஒடுவோர் உள்ள குழுவில் இருந்து, ஆடுகளத்தில் வந்து நிற்கும் 3 ஆட்டக்காரர்கள், தற்காத்து ஓடுவோர் (Defenders) என்று அழைக்கப்படுகிறார்கள். - -

11. கோகொடுத்தல்: உட்கார்ந்திருக்கும் விரட்டுவோனுக்குப் பின்னால், ஓடி விரட்டுவோன் வந்து, அவனைக் கையால்