பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G- டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 233

4. ‘கோ’ கொடுக்கப்பட வேண்டுமானால், விரட்டுவதற்காக உட்கார்ந்திருப்பவரின் பின்னால் சென்றே ‘கோ’ சொல்ல வேண்டும். ஒட்டக்காரர்களுக்கும் நன்றாகக் கேட்குமாறு சத்தமான குரலில் அந்த “கோ சொல்லப்பட வேண்டும். விரட்டுவதற்காக உட்கார்ந்திருப்பவர் தனக்கென்று ‘கோ’ கிடைக்கும் வரை, தன்னிடத்தை விட்டு எழுந்திருக்கக் கூடாது. ஓடி விரட்டுவோன் உட்கார்ந்திருப்பவரின் நீட்டப்பட்டகையையோ அல்லது காலையோ தொட்டு “கோ சொல்லக் கூடாது.

5. ஒரு சதுரக் கட்டத்தில் உட்கார்ந்திருப்பவரின் குறுக்குக் கோட்டைத் தாண்டிக் கடந்து சென்று ஓடி விரட்டுவோன், அதன் பிறகு திரும்பி வந்து, அவரு(னு)க்கு ‘கோ'தரக்கூடாது. பின்வாங்கி வந்து “கோ சொல்வது தவறாகும்.

6. 3, 4, 5 போன்ற விதிகளில் ஏதாவது ஒன்றை ஓடி விரட்டுவோன் மீறினால், நடுவர் விசிலால் தவறு எனக் குறித்துவிட்டு, அவர் ஓடிக் கொண்டிருக்கும் திசைக்கு எதிர்ப்புறமாக ஒட வேண்டும் என்பதைக் கூறுவார். அந்த நேரத்தில் யார் ஓடி விரட்டுகிறாரோ அவரே, ஓடி விரட்டுவோராவார். நடுவரின் விசில் சத்தம் கேட்டவுடனேயே, ஓடி விரட்டுவோர் நின்று, அவர் குறித்துக்காட்டுகின்ற திசையை நோக்கி ஓடவேண்டும். விதிகளை மீறிய இதற்குள் அவர் ஓடுபவர்களைத் தொட்டிருந்தாலும், அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் (Not out). அதற்குப் பிறகு, நடுவர் சுட்டிக்காட்டும் திசை வழியேதான் ஓடி எதிராளிகளை விரட்ட வேண்டும். -

7. உட்கார்ந்திருந்தவரை ‘கோ’ கொடுத்து எழுப்பி ஓடி விரட்டுவோர், முன்னவர் உட்கார்ந்திருந்த சதூக்கட்டத்தில் உடனே சென்று உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

8. உட்கார்ந்து “கோ பெற்று ஓடிவிரட்டுவோனாக மாறியவர்,

தான் எந்தக் குறுக்குக்கோட்டுக் கட்டத்தில் உட்கார்ந்திருந்தாரோ, அந்தக் குறுக்குக் கோட்டுப் பகுதியிலுள்ளதுமான, தான் தேர்ந்தெடுக்கும் திசையை நோக்கியே ஓட வேண்டும். அவர் பின்வாங்கி ஓடுவது கூடாது.

குறிப்பு:காலின் எந்தப்பகுதியினாலாவது, குறுக்குக்கோட்டின் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் வரை, அவனோ அவளோ அந்தக் குறுக்குக் கோட்டைக் கடந்து செல்லவில்லை என்பது தெளிவாகும். உடம்பின் எந்தப் பகுதியாவது அவன்/அவள் நின்று கொண்டிருப்பதற்குப் பின்புறம் உள்ள நிலப்பகுதியைத் தொட்டுவிட்டால், அவன்/அவள் சென்று கொண்டிருக்கும் திசைக்கு