பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 விளையாட்டுக்களின் விதிகள் “. - *

எதிர்ப்புறமாகச் சென்றதாகவே கருதப்படும். அவன்/அவள் பின்வாங்கியதாகக் கூறப்படும். --

9. தன்னுடைய முகத்தைத் திருப்புகிற பக்கத்தையே (திசை) ஓடி விரட்டுவோன் தனது திசையாகக் கொள்ள வேண்டும். (அவளது/அவனது தோள்மட்ட நிலை என்பது தோள்களுக்கு நேராகக் கிழிக்கப்படும் கோட்டுக்குப் பின்னே அவன்/அவள் ஒரு கற்பனைக் கோடு) அந்தக் கற்பனை கோட்டுக்குப் பின்னே அவன்) அவள் பின் வாங்கக் கூடாது. -

10. 8, 9 போன்ற விதிகளில் கூறப்பட்டவற்றில் ஓடி விரட்டுவோன் எந்தத் திசையை முதலில் பின்பற்றினானோ, அந்தத் திசையையோ அவன், தான் போகும் திசையாகக் கொள்ளவேண்டும்.

11. M அல்லது N என்ற கம்பத்திலிருந்து புறப்பட்டுத் திசை கொண்ட ஒரு ஓடி விரட்டுவோன், ‘கோ’ கொடுத்துவிட்டு அமர்ந்தாலன்றி, அடுத்தக் கம்பத்தின் கோடு வரைக்கும் சென்றே திரும்ப வேண்டும். ஒரு பக்கத்திலே ஓடும் ஒரு ஓடி விரட்டுவோன், கம்பத்தைச் சுற்றி வந்தே மறுபக்கம் போகலாமேயொழிய நடுக்கோட்டைத் தாண்டிச் செல்லக் கூடாது.

12. கம்பத்தை விடும்போது ஓடி விரட்டுவோன் எந்த இடத்திலிருந்தாரோ, அவர் அடுத்தக் கம்பத்தை அடையும் வரை அதே திசையில்தான் செல்ல வேண்டும்.

குறிப்பு: கம்பத்தினருகில் இருக்கும் பொழுது அதனருகில் உள்ள நடுக்கோட்டை ஓடி விரட்டுவோன் தாண்டிச் செல்லக் கூடாது.

13. ஒரு ஓடி விரட்டுவோன் எந்தத் திசைவழி சென்று கொண்டிருக்கிறாரோ, அந்தத் திசையில்தான் அவருடைய முகம் (தோள் அளவு நேர்க்கோடு) இருக்க வேண்டும். அவர் (கற்பனை நேர்க்கோட்டுக்கு), அதற்கு மேல் முகத்தைத் திருப்பக் கூடாது. ஆனால், தனது தோள், நேர்க்கோட்டளவை நடுக்கோட்டிற்கு இணையாக இருக்குமாறு மட்டும் அவர் திருப்பிக் கொள்ளலாம்.

14. ஒட்டக்காரர்களுக்குத் தடை எதுவும் நேராதவிதமாக “உட்கார்ந்திருக்கும் விரட்டுபவர்கள் உட்கார வேண்டும். இதுபோன்ற தடையினால் ஒரு ஓடும் ஆட்டக்காரர் தொடப்பட்டால், அவர் தொடப்படவில்லை என்று அறிவிக்கப்படுவார்.

15. திசை கொள்வதற்கும், முகத்தைத் திருப்புவதற்குமான விதிகள் (8 லிருந்து 10 வரை, 13-ம் கூட) நீண்ட சதுரப் பரப்பில் (Free Zone) கவனிக்கப்படுவதில்லை.