பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rs - * டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 235

16. ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது எல்லைகளுக்கு வெளியே செல்கின்ற ஒரு ஓடி விரட்டுவோன், எல்லைகளுக்கு வெளியேயிருந்தாலும், திசை கொள்ளல், முகத்தை திருப்புதல் போன்ற விதிகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

17. விரட்டுவதற்காக உட்கார்ந்திருப்பவரை, ஒட்டக்காரர்கள் தொடவே கூடாது. அவ்வாறு தொடுபவர், முதல் முறை எச்சரிக்கப்படுவார். அந்தத் தவறையே மறுமுறையும் செய்தால், அவர் வெளியேற்றப்படுவார் (Out). * . -

18. ஓடுபவரின் இரு கால்களும் எல்லைக்கு வெளியே சென்றால், அவர் வெளியேற்றப்படுவார்.

குறிப்பு: ஓடுபவரின் கால்கள் இரண்டும் எல்லைக்கு வெளியேயிருந்து, உடல் முழுவதும் ஆடுகளத்தினுள் இருந்தாலும், அவர் எல்லைக்கு வெளியேயிருந்ததாகத்தான் கருதப்படுவார்.

19. எந்த விதிகளையும் மீறாமல், ஒரு ஒட்டக்காரரை ஓடி விரட்டுவோர் தன் கையால் தொட்டால், முன்னவர் வெளியேற்றப் படுவார். -

20. ஒடி விரட்டுவோனும், மற்ற விரட்டும் குழுவினரும் 3 லிருந்து 13 வரையிலுள்ள விதிகளை மீறவே கூடாது. இதில் எந்த விதியை மீறினாலும், தவறு என்றே கொள்ளப்படும். இவ்வாறு தவறு செய்து, ஒரு ஒட்டக்காரரைத் தொட்டுவிட்டாலும், அல்லது ஒருவரைத் தொட்டுவிட்ட பின்னர் அதற்காக எடுத்துக் கொண்ட முயற்சியில் தவறிழைத்து விட்டாலும், அந்த ஒட்டக்காரர் வெளியேற்றப்படவில்லை என்றே அறிவிக்கப்படுவார்.

21. ஒடி விரட்டுவோன் ஒழுங்கான திசை கொள்வதற்கும், 7 லிருந்து 13 வரையுள்ள விதிகளை மீறியவுடன் அதற்கேற்ற சரியான செயலை உடனே செய்வதற்கும் துணை நடுவர் கட்டாயப்படுத்தித் தூண்டி அவரை செயல்பட விட வேண்டும். - - - -

22. தற்காத்து ஓடுபவர், விரட்டுபவரால் தொடப்பட்டு வெளியேற்றப்பட்டதும், அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்திற்குப் போய் அமர்ந்து கொள்ள வேண்டும்.

4.போட்டி ஆட்டத்திற்குரிய விதிகள்

1. ஒவ்வொரு குழுவிலும், குழு மேலாளர், பயிற்சியாளர் உட்பட, 15 பேர்கள் இருப்பார்கள்; அவர்களில் 12 ஆட்டக்காரர்களின் பெயர்கள் ஆட்டக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்க, அவர்களில், 9 பேர்கள், ஆடுவதற்காகக் களம் இறங்குவார்கள்.