பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 விளையாட்டுக்களின் விதிகள் - *ES

(ஈ) ஒவ்வொரு “ஆட்டமுறை (Inning) முடிவிலும் இன்னும் ஆட்ட இறுதியிலும் இரு குழுக்கள் எடுத்துள்ள மொத்த வெற்றி எண்களையும், போட்டியின் முடிவையும் தெரிவிப்பார். - (உ) ஆட்டம் சிறப்புற நடந்து முடிவுபெற, இவரது பொதுவான கண்காணிப்புதான் காரணமாக விளங்குகிறது.

2. நேரக்காப்பாளர் (Time-keeper): அவர் ஒருமுறை நீண்டும், ஒருமுறை குறைத்தும் விசிலை ஊதி, (Onelong, oneshort) ஆடும் வாய்ப்பு முறையைத் துவக்கிவைப்பார். ஆடும் வாய்ப்பு நேரம் முடிந்து விட்டதை நீண்ட விசிலால் தெரிவிப்பார். இவர் கால நேரத்தைக் குறித்துக் கொள்வதும், ஒவ்வொரு ஆடும் வாய்ப்பு முடிவுறுகிற பொழுது அதைக் குறிப்பாளரிடமும் கொடுத்துவிடுவது இவரது பணியாகும். நேரக் காப்பாளரின் பணிகளை, பொதுவாக நடுவர் அல்லது குறிப்பாளர் கவனித்துக் கொள்வார்.

3. குறிப்பாளர் (Scorer): குழுத் தலைவனிடம் இருந்து ஒட்டக்காரர்களின் ஓடும் வரிசையைக் குறித்துக் கொண்டு, அதே வரிசை முறையில் ஒழுங்காக ஆடுகளத்தினுள் நுழைகின்றனரா என்பதைக் கவனித்துக் கொள்வார்.

வெளியேற்றப்பட்ட ஆட்டக்காரர்களைக் குறித்து வைத்துக் கொண்டு, அவர்களை வெளியே உட்கார வைப்பார். ஆடும் வாய்ப்பு முடிந்த பிறகு, குறிப்பேட்டை செவ்வனே குறித்துவைத்து, பின் விரட்டுவோருக்கான குறிப்பேட்டைத் தயார் செய்வார். ஆட்ட முடிவிற்குப் பிறகு, குறிப்பேட்டை சரியாக அமைத்தும், இரு குழுக்களும் பெற்றுள்ள வெற்றி எண்களின் பட்டியலைத் தயார் செய்தும், ஆட்டத்தின் முடிவை எழுதிப் பதிவு செய்தும் வைப்பார். நடுவரிடமும் துணை நடுவர்களிடமும் கையொப்பத்தைப் பெற்று, குறிப்பேட்டை முழுமை செய்து முடித்து வைப்பார். ஒவ்வொரு ஆட்டமுறையின் இறுதியிலும், ஆட்டக்குறிப்பேட்டை நடுவரிடம் தந்து, வெற்றி எண்களை அறிவிக்கச் செய்தும், ஆட்ட முடிவில் முடிந்த பட்டியலை நடுவரிடமும் கொடுப்பார்.

போட்டி ஆட்டத்தை நடத்துபவர்கள் ஆட்ட அதிகாரிகளை நியமிப்பார்கள். அவர்கள் எல்லோரும் நடுவர் காட்டுகின்ற வழியின்படி ஒழுகி, சிறப்புறச் செயல்பட வேண்டும்.