பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24() விளையாட்டுக்களின் விதிகள் உ

பந்து - - “ -

வெளிப்புறத்தில் ஒரே சீரான அமைப்புடன், வெள்ளை வண்ணம் அல்லது மஞ்சள் வண்ணத்தில் பந்தானது அமைந்திருக்க வேண்டும். பந்தில் விளிம்புள்ளதாக (Seam) இருந்தால், அது சீராக தைக்கப்பட்டிருக்க வேண்டும். -

பந்தின் விட்டம் 635 சென்டி மீட்டருக்கு (2% அங்குலம்) குறையாமலும், 6.67 சென்டிமீட்டருக்கு (21,அங்குலம்) மிகாமலும் இருக்க வேண்டும். பந்தின் எடை56.7 கிராம்களுக்கு (2 அவுன்சு) குறையாமலும், 58.5 கிராம்களுக்கு (2 /, அவுன்சு) மிகாமலும் இருக்க வேண்டும். - . . .

ஆட்டக்காரர்கள் - * - “. . . .

வலையின் இருபுறத்திலும் உள்ள ஆடுகளப்பகுதியில் இரண்டு ஆட்டக்காரர்களும் எதிரெதிராக இருந்து ஆடுவார்கள். சர்வீஸ் போடுபவரை, பந்தை அடித்து அனுப்புவர்(Server) என்றும், மற்றவரை பந்தை எடுத்து ஆடுபவர் (Receiver) என்றும் அழைப்பார்கள். தேர்வு செய்தல்

ஆடுகளத்தின் ஒரு பக்கம் வேண்டும் அல்லது முதலில் சர்வீஸ் போடுகிற வாய்ப்பு வேண்டும் என்பதை, நாணயம் சுண்டுவதில் வெற்றி பெறுகிற ஆட்டக்காரர் கேட்டுப் பெறுவர். வென்றவர் ஒன்றைக் கேட்டுப் பெற்ற பிறகு அடுத்ததை மற்றவர் ஏற்றுக் கொள்வார். -

(அ) நாணயம் சுண்டுவதில் வென்றவர், சர்வீஸ் போடும் வாய்ப்பைக் கேட்டால், மற்றவர் ஆடுகிற பக்கத்தில் எது வேண்டும் என்று தேர்வு செய்து கொள்ளலாம்.

(ஆ)வென்றவர் ஆடுகளப் பக்கத்தைத்தேர்வுசெய்தால், சர்வீஸ்

போடுகிற வாய்ப்பு மற்றவருக்குப் போய்ச் சேரும்.

---, 3. சர்வீஸ் போடும் முறை

சர்வீஸ் போடுவதற்கு முன்னதாக, சர்வீஸ் போடஇருப்பவர், கடைக்கோட்டிற்குப் பின்புறம் வந்து, அந்தக் கோட்டைமிதிக்காமல்,

இரு கால்களும் தரையில் படும்படி நின்று, கடைக்கோட்டின் மத்தியில் ஆடுகளத்தை இரண்டாகப் பிரிக்கும் மைய சர்வீஸ் கோட்டின் பின்பகுதியில் இருந்து, சர்வீஸைப் போடத் தொடங்க வேண்டும். -