பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 - டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா - 247

பந்தை அடித்து வழங்குபவர், பந்தை ஒரு கையிலிருந்து விருப்பமான உயரத்தில்துக்கிப் போட்டு, கீழே இறங்கிவரும்போது அதாவது அந்தப்பந்து தரையைத் தொடுவதற்கு முன்னதாக, தனது பந்தடி மட்டையால் அடிக்க வேண்டும். பந்தடி மட்டையில் பந்து பட்டவுடனேயே, அவரது சர்வீஸ் போட, தனது பந்தடித்தாடும் மட்டையை ஒரு கையால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சர்வீஸ் போடுகிறவர் - சர்வீஸுக்காகப் பந்தை உயர்த்திப் போட்டு அடித்து முடிக்கும் வன்.

(அ)இருகால்களைதரையில் ஊன்றிப்பதித்தநிலையிலிருந்து, நடக்கவோ, ஓடவோ கூடாது.

(ஆ) கால் வைத்திருக்கும் இடத்திற்கு முன்புறம் உள்ள கடைக்கோட்டையோ அல்லது மைய சர்வீஸ் கோட்டெல்லையின் கோட்டையோ எந்தக் காலாலும் தொடக்கூடாது.

குறிப்பு: அகில உலகக் கழகத்தால் 1958 சூலை மாதம் 9-ந் தேதியன்று விளக்கிக் கூறப்பட்ட விதியின்படி

(அ) சர்வீஸ் போடுபவர், ஏற்கெனவே தான் பதித்திருந்த கால்களின் இடத்தை, சிறிது நகர்த்தினாலும், அவர் நடந்ததாகவோ அல்லது ஓடியதாகவோதான் கருதப்படும். -

(ஆ) பாதம் (Foot) என்பது கேனுக்கால்களுக்குக் உள்ள பகுதியாகும். - -

சர்வீஸ் போடுகிறபோது, வலது ஆடுகளப்பகுதி அல்லது இடது ஆடுகளப் பகுதி, இதில் எந்தப் பகுதியாயிருந்தாலும், அந்தப் பகுதிக்குரிய கடைக்கோட்டின் பின்னால் உள்ள இடத்திலிருந்து தான், சர்வீஸ் போடுவதைத் தொடங்கவேண்டும். ஒவ்வொரு முறை ஆட்டம் (Game) தொடங்குவதற்கு முன்பாக, வலது ஆடுகளப் பகுதியின் எல்லைக் கோட்டுக்குப் பின் இடத்திலிருந்துதான் தொடங்க வேண்டும்.

தவறான ஆடுகளப்பகுதியின் பின்புறமிருந்து சர்வீஸ் போட்டு, அது தவறான சர்வீஸ் என்பதை யாரும் கண்டுபிடிக்காமல் இருந்தால், அந்த ஆட்டம் நடந்தது எல்லாம் சரின்ெறே ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், அந்தத் தவறைக் கண்டுபிடித்த உடன், சரியான சர்வீஸ் பகுதி எது என்பதைக் கண்டறிந்து, அதன்படியே அடுத்த சர்வீஸைத் தொடரவேண்டும்.