பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 விளையாட்டுக்களின் விதிகள் அ

(எ) பந்தடித்தாடுபவர் கைகளில் அல்லது கையில் - பிடித்திருக்கும் மட்டையைத் தவிர, ஆட்டக்காரரின் மேல் அல்லது அவர் அணிந்திருக்கும் அணிகலன்களின் மேல்பட்டுவிடுகிறபோது, (ஏ) தனது பந்தடி மட்டையைத் தூக்கி எறிந்துவிட்டு பந்தை அடிக்கிறபோதும் - தவறிழைத்தவர் வெற்றி எண்ணை இழக்கிறார். ஓர் ஆட்டக்காரர், வேண்டுமென்று விரும்பியோ அல்லது தற்செயலாகவோ, தவறிழைத்து, அதனால், எதிராட்டக்காரர் சரியாகப் பந்தை விளையாட முடியாமற் போய்விட்டது என்று நடுவர் கருதினால், அந்த நேரத்திற்குரிய வெற்றி எண்ணை பாதிக்கப்பட்ட ஆட்டக்காரருக்கு வழங்கலாம்.இல்லையேல், மீண்டும் அதே வெற்றி எண்ணுக்குரிய ஆட்டத்தைத் தொடரலாம் என்று நடுவரானவர், இப்படிப்பட்ட அறிவிப்பையும் செய்யலாம். -

ஆடுகள எல்லைக் கோட்டின் மேல் பந்து விழுந்தாலும், அது ஆடுகள எல்லைக்குரிய தரையில் விழுந்ததாகவே கருதப்படும்.

ஆடப்பட்ட பந்து முதலில், ஆடுகள எல்லைக்குள்ளே விழுந்து பிறகு, துள்ளிப்போய் நிலையாகப் பொருத்தியுள்ள பொருட்களைத் தொட்டால் (வலை, கம்பங்கள், கம்பிகள், பட்டைகள், நாடாக்கள் தவிர) அடித்தாடியவருக்கு வெற்றி எண் கிடைக்கும். ஆடுகளத் தரையில் விழுவதற்கு முன்பே, நிலையாகப் பொருந்தியுள்ள தரையைத் தொட்டு விழுந்தால், எதிராட்டக்காரருக்கு வெற்றி எண் கிடைக்கும். - - - . . . . . . கீழ்க்கண்டவாறு ஆடப்படுகிற பந்து, சரியாக sigliutiun-i-uresh (Good Return):

(அ) சர்வீஸ் போட்டாலும் அல்லது பந்தை எடுத்தாடிதிருப்பி அனுப்பினாலும், அதற்குரிய ஆடுகள் எல்லைப் பகுதிக்குள் வலைக்கு மேலாக வந்து விழுந்தால், அது சரியான ஆட்டமாகும். அவரது உடையோ, அணிகலனோ, அவரது ஆடும் மட்டையோ, வலை, கம்பங்கள், கம்புகள், கயிற்றுக் கம்பிகள், பட்டைகள், நாடாக்கள் போன்றவற்றைத் தொட்டாலும், தொட்டபிறகுவலைக்கு மறுபுறம் எதிராளி ஆடுகளப் பக்கத்திற்கு வந்தாலும் அது தவறாகும்.

(ஆ) வலைக் கம்பத்திற்கு வெளிப்புறமாக வருவது போல, அல்லது ஒற்றையர் ஆட்டத்தைக் குறிக்கும் எல்லைக் கம்புக்கும் வெளியிலிருந்து வருகிற பந்து, வலைக்கு மேலேயோ அல்லது வலை அளவிலோ வந்து கம்பத்தைத் தொட்டாலும் அல்லது எல்லைக் கம்பத்தைத்தொட்டுவிட்டு, சரியான ஆடுகளப் பகுதிக்குள் பந்து விழுந்தாலும், அது சரியான ஆட்டமாகும்.