பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 விளையாட்டுக்களின் விதிகள் *Eo

எடுத்தால், அதற்கு சாதக நிலை (Advantage) என்றும், எதிராட்டக்காரரும் அடுத்த வெற்றி எண்ணை எடுக்கிறபோது, மீண்டும் சமநிலை என்றும் அறிவிக்கப்படும். இப்படியே ஆட்டம் தொடர்கிறபோது, சமநிலைக்குப்பிறகு எந்த ஆட்டக்கரர்2வெற்றி எண்களைத் தொடர்ந்தாற்போல் எடுக்கிறாரோ அவரே அந்த முறை ஆட்டத்தில் வென்றவராவார். - - o o

ஆட்டக்காரர் இருவரில் (ஆட்டக்காரர்கள்) யார் முதலில் 6 முறை ஆட்டங்களில் வெல்கிறாரோ, அவரே அந்தத் தொகுப்பாட்டத்தில் (Set) வென்றவராவார். என்றாலும், ஒருபோட்டி ஆட்டத்தில் வெற்றி பெற குறைந்தது 2 தொகுப்பு ஆட்டங்களில் அதிகம் வென்றிருக்க வேண்டும். (6-4; 7-5 என்பது போல). தொகுப்பாட்டத்தில் வெல்ல, அதிக முறை ஆட்டங்களில் ஆடுவதற்காகவும் வாய்ப்புகள் தரப்படும். -

ஒவ்வொரு தொகுப்பாட்டத்திலும் (Set) ஆட்டக்காரர்கள் 1,3, 5 என்பது போல வரும் முறை ஆட்டங்களின் போதும் தங்கள் ஆடுகளப் பகுதிகளை மாற்றிக் கொண்டு ஆடவேண்டும்.

இப்படி ஒவ்வொரு ஒற்றைப்படையில் வரும் முறை ஆட்டங்களில் மாற்றிக் கொள்வது போல, தொகுப்பாட்டம் (Set), முடிவடைந்தாலும் அதே மாற்றும் முறைப்படியே (Change) தான் அடுத்த தொகுப்பாட்டத்திற்கும் பகுதியையும் சர்விலையும் மாற்றி ஆட வேண்டும் அல்லது அதே முறையைப் பின்பற்றியே தொடர வேண்டும். - -

ஒரு போட்டி ஆட்டத்தில், அதிக எண்ணிக்கை கொண்ட தொகுப்பாட்டம் 5 என்றும்; பெண்களுக்கானது 3 என்றும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இங்கே குறிப்பிட்டிருக்கிற விதிமுறைகள் எல்லாம், ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் பொதுவானதாகும்.

போட்டிகளுக்கான நடுவர் ஒருவரை நியமித்த பிறகு, அவர் எடுக்கிற முடிவே இறுதியானதாகும். நியமிக்கப்பட்ட நடுவரிடம் துணை நடுவராகப் பணியாற்றுபவர், தனது முடிவைக் கூறினாலும், இறுதியாக நடுவர் கூறுவதே முடிவான முடிவாகும்.

நடுவருக்கு உதவியாளர்களாக நியமிக்கப்படுகிற வலை நடுவர். கோடு கண்காணிக்கும் நடுவர், கோடு மிதித்த தவறைக் கண்டுபிடிக்கும் கண்காணிப்பாளர்கள் போன்றவர்கள் கூறுகிற முடிவே சரியான முடிவாகும். அவர்களால் சரியான முடிவை எடுக்க