பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 விளையாட்டுக்களின் விதிகள் உ

போட்டிக்கு 3-வது தொகுப்பாட்டமும் பெண்கள்போட்டிக்கு 2-வது தொகுப்பாட்டமும்) போதிய அவகாசம் தரலாம். ஆனால் அப்படித் தருகிற ஓய்வும் கால அவகாசமும், சம்பந்தப்பட்டஆட்டக்காரருக்குப் போதிய பலம் தருவது போலவும், பயிற்சியாளர்களிடமிருந்து ஆலோசனை அல்லது முக்கிய குறிப்புரை பெறுவது போலவும் அமைந்து விடக்கூடாது.

நடுவரானவர் ஆட்டத்தை ஒத்தி வைத்தல், தாமதப்படுத்துதல் அல்லது இடையீட்டைத் தவிர்த்தல் போன்று முடிவெடுக்க முழு. அதிகாரம் படைத்தவராக விளங்குகிறார். இதுபோல் நடைபெறாமல் தடுக்க, குறிப்பிட்ட ஆட்டக்காரருக்கு எச்சரிக்கை அளிக்கலாம். தவறு செய்கிற ஆட்டக்காரருக்கு எச்சரிக்கை அளிக்கலாம். தவறு செய்கிற ஆட்டக்காரரை ஆட்டத்தில் பங்குபெறுகிற தகுதியையும் தடுத்து, தகுதியிழக்க (Disquality) செய்யவும் நடுவருக்கு முழு அதிகாரம் உண்டு. =

குறிப்பு: (அ) மேலே கூறியுள்ள விதியை மாற்றியமைத்துச் செயல்பட எந்த நாட்டிற்கும் உரிமை உண்டு. அந்த நாட்டுக்குள்ளே நடைபெறுகிற போட்டிகள், தொடர் போட்டிகள் போன்றவற்றை

(டேவிஸ் கோப்பை, பெடரேஷன் கோப்பை) தங்களுக்கு ஏற்ப

மாற்றிக் கொள்ள உரிமை உண்டு.

(ஆ) ஒருமுறை ஆட்டம் முடிந்த பிறகு (Game), ஆட்டக்காரர்கள் தங்கள் ஆடுகளப் பகுதியை மாற்றிக் கொள்ள 1 நிமிட நேரம் அவகாசம் உண்டு. அதற்குள் அவர்கள் அடுத்த முறை ஆட்டத்தில் பங்கு பெற தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். 9ni-sol-uit eeyl-L-th (Doubles Game)

மேலே கூறப்பட்ட விதிகள் அனைத்தும், இரட்டையர்

ஆட்டத்திற்கும் பொருந்தும்.மேலும் சில விதிமுறைகள் கீழ்க்காணும் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. -

சர்வீஸ் போடுகிற வரிசைமுறை, ஒவ்வொரு தொகுப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே ஒழுங்குபடுத்தப்படுகிறது. -

முதலில் சர்வீஸ் போடுவதைத் தொடங்க இருக்கிற இரட்டையர் அணியில் யார் முதலில் சர்வீஸ் போடுவது என்றும், எதிர் அணியில் யார் இரண்டாவது முறை ஆட்டத்தில் (Game) சர்வீஸை முதலில் போடுவது என்றும் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

முதல் முறை ஆட்டத்தில், முதலில் சர்வீஸ் போட்டவரின் பாங்கர், வருகிற மூன்றாவது முறை ஆட்டத்திற்கான சர்வீஸைப்