பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 விளையாட்டுக்களின் விதிகள் - =

- போது, அவர்கள் முன்பு தீர்மானித்து தொடர்கிற எடுத்தாடும் வரிசை

+ - -

முறைக்கு மீண்டும் வந்துவிட வேண்டும். அந்தத் தொகுப்

- பாட்டத்திலும் அப்படியே தான் தொடர வேண்டும்.

சரியாக சர்வீஸ் போட்டாலும், சர்வீஸ் போட்டவருடைய பாங்கர்

மேல் அந்த சர்வீஸ் பந்து பட்டால் அல்லது அவர் அணிந்திருக்கிற

ஆடை அணிகலன், பந்தாடும் மட்டை மீது பட்டாலும் அது தவறான

சர்வீஸ் என்றே அறிவிக்கப்படும்.

அதுபோலவே, எடுத்தாடுபவர்சர்வீஸ் பந்தை எடுத்தாடும்போது. அவரது பாங்கர்மேல்பட்டாலும் அல்லது அவர் ஆடைஅணிகலன். மட்டை மேல் பட்டாலும் அதுவும் தவறான ஆட்டமே. சர்வீஸ் போட்டவருக்கு, அந்த வெற்றி எண் கிடைக்கும்.

ஆட்டத்தில் உள்ள பந்தை ஒரு ஆட்டக்காரர்அடித்து அனுப்ப

அதை எதிராட்டக்காரர்களில் யாராவது ஒருவர் அடித்துத் திருப்பி அனுப்ப, இப்படியே ஒருவர் மாற்றி ஒருவர் ஆடிடவேண்டும். எந்த ஆட்டக்காரராவது இந்த விதியை மீறி, பந்து ஆட்டத்தில் தன் பாங்கர் ஆடுகிறபோது தனது மட்டையால் தொடுகிறபோது அது தவறான ஆட்டமாகிறது. அப்பொழுது எதிராட்டக்காரர்கள் 1 வெற்றி

எண்ணைப் பெறுவார்கள். -

5. சமநிலைச் சிக்கலைத் தீர்க்கும் முறைகள் (Tie Break)

அகிலஉலக டென்னிஸ் கழகத்தால், அங்கீகரிக்கப்பட்டவிதிகள் முன்பு கொடுத்திருந்த முக்கியமான விதி முறைகள் போல, ஏற்படும் சமநிலையைத் தகர்த்து சரி செய்யும் விதி முறைகள், கீழே

தரப்பட்டுள்ளன.

1.போட்டியை நடத்துகிறநிர்வாகக் குழுவானது, போட்டிகளைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, சமநிலையை சரி செய்யும் முயற்சியை மேற்கொள்ள, சமநிலை வருவது 6 முறை ஆட்டங்கள் எடுத்து இருவரும் சமமாக இருக்கும் சமநிலையின் போதா அல்லது 8 முறை ஆட்டங்கள் எடுத்து இருவரும் சமமாக இருக்கும்போதா என்பதைத் தீர்மானித்து, முன்னதாகவே ஆட்டக்காரர்களுக்கு அறிவித்து விட வேண்டும். -

- 8 முறை ஆட்டங்களில்தான் (Game) சமநிலை அறிவிக்கப்படும் என்று தீர்மானித்திருந்தாலும், போட்டிநடத்தும் நிர்வாகக் குழு ஆட்ட நலனுக்காகவும், பார்வையாளர்களின் உற்சாகத்திற்காகவும், 6