பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-** - டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 257

ஆட்டங்களில் சமநிலை என்று அறிவித்து சரி செய்கிற முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். - . குறிப்பு: உள்ளாடும் அரங்கத்தில் போட்டி நடத்தப்படுகிற பொழுது (அல்லது புல் தரை டென்னிஸ் கழகத்தினரால் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியின்படி), இறுதி தொகுப்பாட்டத்தில் (Final Set) Loll_Gib சமநிலை சிக்கலைத் தீர்க்க முயற்சிக்கலாம். சமநிலை சிக்கலை சரிசெய்யும் விதிமுறைகள் - சமநிலை சிக்கலானது இரண்டு ஆட்டக்காரர்களும் 6-6 என்று முறை ஆட்டங்களில் வென்றிருக்கும் நிலையில் ஏற்படுகிறது. (8-8 என்று போட்டி நிர்வாகக் குழு முடிவெடுத்திருந்தால், 8-8 என்பது தான் சிக்கல் நிலை)

அந்தச் சிக்கல் நிலை ஒவ்வொரு தொகுப்பாட்டத்தின் இறுதியிலும் ஏற்பட்டுவிடுகிறது. அதனை சரிசெய்யும் விதி முறைகள். . . .

ஒற்றையர் ஆட்டம் * --

(அ) எந்த ஆட்டக்காரர் முதலில் 7 வெற்றி எண்களைப் பெறுகிறாரோ அவரே வென்றவராவார். அதாவது அவர் எதிராளியைவிட அதிகமாக 2 வெற்றி எண்களை வென்றிருக்க வேண்டும். - . . . -

வெற்றி எண் 6 என்று வந்த பிறகு, மேற்கூறிய2முறை வெற்றி எண்கள் அதிகமாக ஒருவர் எடுக்கும் வரை, ஆட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். o

சமநிலைச் சிக்கலை சரிசெய்யும் பொழுது, எண் இலக்கக் (5soloilo (peopgou5mein (Numerical scoring system) Sleisuspp வேண்டும். - - - - -

(ஆ) சிக்கல் ஏற்படும் பொழுது அந்த முறை ஆட்டம் முடிந்து யாருக்கு சர்வீஸ் போடும் வாய்ப்பு வருகிறதோ, அவர்தான் முதல் சர்வீஸைப் போட்டுத் தொடங்க வேண்டும். எடுத்தாடிய அவரது எதிராட்டக்காரர். 2-வது, 3-வது சர்வீஸ்களைப் போட வேண்டும். பிறகு, முதலில் சர்வீஸ்போட்டவர்4-வது,5-வது சர்வீஸ்களைப்போட வேண்டும். இப்படியே அவர்கள், அந்தத் தொகுப்பாட்டத்தை வெல்ல, 2 வெற்றி எண்களை (ஒருவரைவிட) அதிகமாக எடுக்கும் வரை ஆட்டம் தொடரும். +

(இ) முதலாமவர் முதல் சர்வீஸைப் போடுகிறபோது, முதலில் தமது வலது ஆடுகளப் பகுதியிலிருந்துதான் (Right court) போட்டு,

7.

-