பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 விளையாட்டுக்களின் விதிகள் >

அதில் வென்றால் இடது ஆடுகளப் பகுதிக்குப் போக வேண்டும். ஆனால், எப்பொழுதும் சர்வீஸைத் தொடங்கி வலது புற ஆடுகளத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

(ஈ) ஆட்டக்காரர்கள் இருவரும் ஒவ்வொரு 6 வெற்றி எண்களுக்குப் பிறகு, ஆடுகளப் பக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

(உ) சமநிலைச் சிக்கலைத் தீர்க்க ஆடுகிற ஆட்டம் எல்லாமே ஒரு தொகுப்பாட்டத்திற்குரியதுதான். புதிய பந்து மாற்றுதல் (Changing Balls)

குறப்பிட்ட முறை ஆட்டங்களை (Games) ஆடி முடித்த பிறகு, புதிய பந்துகள் கொடுக்கப்படவேண்டும். ஏற்கெனவே முடிவுசெய்து வைத்திருந்தது போல, புதிய பந்துகள் கொடுக்கப்படாத சூழ்நிலையில் அந்தத் தவறு கண்டுபிடிக்கப்படுகிறபோது, யார் சர்வீஸ் போடுகிற சமயத்தில், பந்து மாற்றப்படவேண்டும் என்பதை (கொடுக்கப்படாத) குறிப்பிட்டவருக்கு அடுத்து யார் சர்வீஸ் போட வேண்டுமோ, அவருக்குப் புதிய பந்துகளைத் தந்திட வேண்டும். பிறகு அடுத்தமுறை புதிய பந்துகள் தரப்பட வேண்டியமுறை ஆட்டம் வருகிறபோது, அப்பொழுதே புதிய பந்துகளைத் தந்து ஆடச் செய்ய வேண்டும். - (5.5lileo’s (Coaching)

குழு போட்டி ஆட்டம் நடைபெறுகிறபோது, ஆடுகளப் பக்கவாட்டில் அமர்ந்திருக்கிற அணித்தலைவரிடமிருந்து குறிப்புரையையும் அறிவுரையையும் ஒரு ஆட்டக்காரர் பெறலாம். ஆனால் அது ஆட்டத்தின் போது அல்ல. அந்த முறை ஆட்டம் முடிந்து, ஆடுகளப் பகுதிகளை மாற்றிக் கொள்கிற இடைநேரத்தின் போது மட்டுமே பெற வேண்டும். அதே சமயத்தில், ஆட்டத்தின் சமநிலை சிக்கலைத் தீர்க்க ஆடுகிற சமயத்தில், (Tie break game) ஆடுகளப் பகுதியை மாற்றிக் கொள்கிற போது, குறிப்புரை பெறவே கூடாது. அது தவறாகும்.

விளையாடிக் கொண்டிருக்கும்போது, அறிவுரையை பெறவே கூடாது. உரிய எச்சரிக்கை பெற்ற பிறகும், தொடர்ந்து (அறிவுரை) குறிப்புரை பெறும் ஆட்டக்காரர், ஆட்டத்தை விட்டேநீக்கப்படுவார். விளையாடிக் கொண்டிருக்கும்போது, அறிவுரையை பெறவே கூடாது. உரிய எச்சரிக்கை பெற்ற பிறகும், தொடர்ந்து (அறிவுரை) குறிப்புரை பெறும் ஆட்டக்காரர், ஆட்டத்தை விட்டேநீக்கப்படுவார். குறிப்பு: 1. பேசாமல், சைகை மூலமாக மற்றவருக்குத் தலையிடாத முறையில் குறிப்புரை தந்தால், நடுவர் எச்சரிக்கை